/
உள்ளூர் செய்திகள்
/
கிருஷ்ணகிரி
/
ஓட்டுச் சாவடி மையம் கலெக்டர் நேரில் ஆய்வு
/
ஓட்டுச் சாவடி மையம் கலெக்டர் நேரில் ஆய்வு
ADDED : ஏப் 07, 2024 03:26 AM
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
பாலக்கோடு: தர்மபுரி மாவட்டம், பாலக்கோடு அடுத்த கோவிலுார் ஊராட்சி ஒன்றிய துவக்கப்பள்ளி ஓட்டுச் சாவடி மையத்தை, மாவட்ட தேர்தல் அலுவலரும், மாவட்ட கலெக்டருமான சாந்தி ஆய்வு செய்தார்.
இதேபோல், கொத்தலம் பஞ்., ஊராட்சி ஒன்றிய துவக்கப்பள்ளி மற்றும் தாசன்பள்ளம் பஞ்.,க்கு உட்பட்ட ஊராட்சி ஒன்றிய துவக்கப்பள்ளி ஆகிய பள்ளிகளில் உள்ள ஓட்டுச்சாவடி மையங்களை ஆய்வு செய்து, ஓட்டளிக்க வரும் வாக்காளர்களுக்கு போதிய அடிப்படை வசதிகள் உள்ளதா என அவர் கேட்டறிந்தார். உதவி தேர்தல் நடத்தும் அலுவலர் தனப்பிரியா, தாசில்தார் ஆறுமுகம், துணை தாசில்தார் எழில்மொழி உள்பட பலர் உடனிருந்தனர்.

