/
உள்ளூர் செய்திகள்
/
கிருஷ்ணகிரி
/
அ.தி.மு.க., வேட்பாளருக்கு ஆதரவாக ஓமலுார் எம்.எல்.ஏ., ஓட்டு சேகரிப்பு
/
அ.தி.மு.க., வேட்பாளருக்கு ஆதரவாக ஓமலுார் எம்.எல்.ஏ., ஓட்டு சேகரிப்பு
அ.தி.மு.க., வேட்பாளருக்கு ஆதரவாக ஓமலுார் எம்.எல்.ஏ., ஓட்டு சேகரிப்பு
அ.தி.மு.க., வேட்பாளருக்கு ஆதரவாக ஓமலுார் எம்.எல்.ஏ., ஓட்டு சேகரிப்பு
ADDED : ஏப் 07, 2024 04:01 AM
ஓமலுார்: சேலம் லோக்சபா தொகுதி, அ.தி.மு.க., வேட்பாளர் விக்னேஷ், ஓமலுார் தெற்கு ஒன்றியம், காடையாம்பட்டி மேற்கு ஒன்றிய பகுதிகளில் நேற்று பிரசாரத்தில் ஈடுபட்டார். மேட்டுப்பட்டி, ஏ.டி., காலனி, புளியம்பட்டி உள்பட, 39 பகுதிகளில் பிரசாரம் செய்தார். சென்ற இடமெல்லாம், மக்கள் ஆரவாரத்துடன் அவருக்கு வரவேற்பு கொடுத்தனர். அவருக்கு ஆதரவாக, ஓமலுார் எம்.எல்.ஏ., மணி பிரசாரத்தில் ஈடுபட்டு பேசியதாவது:
இ.பி.எஸ்., மூலம் அடையாளம் காட்டப்பட்ட விக்னேஷ், உங்கள் வீட்டுப்பிள்ளை என்பதால், கூப்பிட்ட குரலுக்கு ஓடோடி வருவார். 3 ஆண்டு, தி.மு.க., ஆட்சியில் சேலத்துக்கு என்ன செய்தார்கள். ஏதாவது சொல்ல முடியமா? சுடுகாட்டு கூரை உள்பட, 3 வழக்குகளில் தண்டனை பெற்றவர் தான், தி.மு.க., வேட்பாளர் செல்வகணபதி. அவர் பொறுப்புக்கு வந்தால் என்ன நடக்கும் என மக்கள் சிந்திக்க வேண்டும்.
அ.தி.மு.க., ஆட்சியில் சேலம் மாவட்டத்துக்கு எண்ணற்ற திட்டங்கள் நிறைவேற்றப்பட்டன. தாலிக்கு தங்கம், மாணவர்களுக்கு லேப்டாப், அம்மா மினி கிளினிக், மானிய விலையில் மகளிருக்கு இருசக்கர வாகனம், விவசாயத்துக்கு பயன்படும்படி, 100 ஏரிகளுக்கு நீர் நிரப்பும் திட்டம், அரசு பள்ளி மாணவர்களுக்கு, 7.2 சதவீத மருத்துவர் திட்டம், விபத்துக்களை தவிர்க்கும்படி மேம்பாலங்கள் என்பன உள்பட பல்வேறு திட்டங்கள் கொண்டுவரப்பட்டன. ஆனால் இந்த விடியா, தி.மு.க., அரசு அனைத்தையும் முடக்கி வைத்துள்ளது.
விலைவாசி உயர்வு, மின் கட்டணம், கட்டுமான பொருட்கள் விலை உயர்வு என அனைத்து தரப்பு மக்களும் பாதிக்கப்பட்டுள்ளனர். இப்படிப்பட்ட தி.மு.க., அரசை வீட்டுக்கு அனுப்ப, அ.தி.மு.க., வேட்பாளர் விக்னேஷூக்கு இரட்டை இலை சின்னத்தில் ஓட்டளித்து வெற்றி பெறச்செய்ய வேண்டும்.
இவ்வாறு அவர் கூறினார்.
முன்னாள் எம்.எல்.ஏ.,க்கள் கிருஷ்ணன், வெற்றிவேல், ஓமலுார் ஒன்றிய குழு தலைவர் ராஜேந்திரன், ஒன்றிய செயலர் கோவிந்தராஜ், ஒன்றிய கவுன்சிலர் பரமசிவம், நகர செயலர் சரவணன், தே.மு.தி.க., - புரட்சி பாரதம் உள்ளிட்ட கூட்டணி கட்சி நிர்வாகிகள் பங்கேற்றனர்.

