/
உள்ளூர் செய்திகள்
/
கிருஷ்ணகிரி
/
ரூ.73 லட்சம் மாங்கூழ் ஆர்டர் போட்ட போலி நபர்கள் சரக்கை கப்பலில் அனுப்பி ஏமாந்த கிருஷ்ணகிரி நிறுவனம்
/
ரூ.73 லட்சம் மாங்கூழ் ஆர்டர் போட்ட போலி நபர்கள் சரக்கை கப்பலில் அனுப்பி ஏமாந்த கிருஷ்ணகிரி நிறுவனம்
ரூ.73 லட்சம் மாங்கூழ் ஆர்டர் போட்ட போலி நபர்கள் சரக்கை கப்பலில் அனுப்பி ஏமாந்த கிருஷ்ணகிரி நிறுவனம்
ரூ.73 லட்சம் மாங்கூழ் ஆர்டர் போட்ட போலி நபர்கள் சரக்கை கப்பலில் அனுப்பி ஏமாந்த கிருஷ்ணகிரி நிறுவனம்
ADDED : ஏப் 04, 2024 05:00 AM
கிருஷ்ணகிரி: கிருஷ்ணகிரி அருகே, மாங்கூழ் தொழிற்சாலையில் போலி நபர்கள், ஒரு கம்பெனியின் பெயரை தவறாக பயன்படுத்தி, 73 லட்சம் ரூபாய் மதிப்பிலான மாங்கூழை வெளிநாட்டுக்கு அனுப்ப வைத்ததால், மாங்கூழ் தொழிற்சாலை நிர்வாகம் ஏமாற்றம் அடைந்துள்ளது.
கிருஷ்ணகிரி மாவட்டம், சாப்பர்த்தி அடுத்த கருத்தமாரம்பட்டியை சேர்ந்தவர் ரமேஷ்குமார், 59; இவர், 'நியூஜென் அக்ரோ புராசசர்ஸ்' என்ற நிறுவனத்தில் நிர்வாக இயக்குனராக உள்ளார். இவரின் அலுவலக மெயிலுக்கு, கடந்த, 2023 அக்., 25 ல் ஒரு தகவல் வந்துள்ளது. அதில், தாங்கள் கென்யா நாட்டின் சிஸ்கோ கார்ப்பரேஷன் கம்பெனியிலிருந்து தொடர்பு கொள்கிறோம். எங்களுக்கு, 87,290 டாலர் மதிப்பிலான மாங்கூழ் தேவைப்படுகிறது. அதை உடனடியாக அனுப்பினால், உங்களுக்கான தொகை அனுப்பப்படும், என இருந்தது.
அவர்கள் கேட்ட மாங்கூழ் இந்திய மதிப்பில், 73 லட்சம் ரூபாய். இதையடுத்து ரமேஷ்குமார், இ.சி.ஜி.எஸ் எனப்படும் சந்தைப்படுத்துதல், விற்பனைக்கான அனுமதி பெற்று, கென்யாவில் உள்ள சிஸ்கோ கார்ப்பரேஷன் கம்பெனிக்கு, அவர்கள் கேட்ட மாங்கூழை அனுப்ப முடிவு செய்தார். கடந்த, 2023 நவ., 11 ல் எண்ணுார் துறைமுகத்திலிருந்து கப்பல் மூலம், கென்யாவின் மொம்பாசா துறைமுகத்திற்கு மாங்கூழை அனுப்பினார். அதற்கான தகவலும் கென்யாவிலுள்ள அந்த கம்பெனிக்கு தெரிவிக்கப்பட்டது.
அப்போது அந்த கம்பெனியின் நிர்வாகிகள், நாங்கள் மாங்கூழ் எதுவும் ஆர்டர் செய்யவில்லை எனக்கூறி மறுத்துள்ளனர். மேலும், ரமேஷ்குமாருக்கு போலியான நபர்கள், கென்யா கம்பெனி பெயரை பயன்படுத்தி பேசியதும், மெயில் அனுப்பியதும் தெரிந்தது. மாங்கூழ் கென்யா துறைமுகத்திற்கு சென்ற நிலையில், அதை வாங்கவும் யாரும் வரவில்லை.
போலியான நபர்கள் பேசி, தன் கம்பெனியில் இருந்த, 73 லட்சம் ரூபாய் மாங்கூழை ஏமாற்றி வாங்க முயன்றதை அறிந்த ரமேஷ்குமார் அதிர்ச்சியடைந்தார். இது குறித்து, கிருஷ்ணகிரி சைபர் கிரைமில் அளித்த புகார்படி, போலீசார் விசாரிக்கின்றனர்.

