/
உள்ளூர் செய்திகள்
/
கிருஷ்ணகிரி
/
காயத்ரி அம்பாள் கோவில் வருஷாபிஷேக விழா
/
காயத்ரி அம்பாள் கோவில் வருஷாபிஷேக விழா
ADDED : மே 15, 2024 08:07 AM
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
ஓசூர் : ஓசூர் ராயக்கோட்டை சாலையிலுள்ள முல்லை நகர் காயத்ரி அம்பாள் கோவிலில், 11ம் ஆண்டு வருஷாபிஷேக விழா நேற்று நடந்தது. அதிகாலை, 5:30 மணிக்கு, சுவாமிகளுக்கு அபிஷேகம் நடந்தது.
காலை, 7:30 மணிக்கு, கணபதி ஹோமம், சண்முகர் ஹோமம், காயத்ரி மூல மந்திர ஹோமம் உட்பட பல்வேறு ஹோமங்கள் நடந்தன. காலை, 11:00 மணிக்கு, கோவில் வளாகத்தை சுற்றி பக்தர்கள் பால்குடம் எடுத்து வந்தனர்.
தொடர்ந்து சுவாமிக்கு சிறப்பு பூஜை செய்யப்பட்டது. ஏற்பாடுகளை, காயத்ரி அம்பாள் கோவில் டிரஸ்ட் நிர்வாகிகள் செய்திருந்தனர்.

