/
உள்ளூர் செய்திகள்
/
கிருஷ்ணகிரி
/
தி.மு.க., - அ.தி.மு.க., காலாவதியான கட்சிகள்
/
தி.மு.க., - அ.தி.மு.க., காலாவதியான கட்சிகள்
ADDED : ஏப் 11, 2024 12:08 PM
அரூர்: ''தி.மு.க., - அ.தி.மு.க.,விடம் புதிய சிந்தனைகள், திட்டங்கள் இல்லை. அவை காலாவதியான கட்சிகள்,'' என, பா.ம.க., தலைவர் அன்புமணி பேசினார்.
தர்மபுரி லோக்சபா தொகுதியில், தேசிய ஜனநாயக கூட்டணியின், பா.ம.க., வேட்பாளர் சவுமியாவிற்கு ஆதரவு கேட்டு, பா.ம.க., தலைவர் அன்புமணி, அரூர் சட்டசபை தொகுதிக்கு உட்பட்ட மொரப்பூர், அரூர், கோபிநாதம்பட்டி கூட்ரோட்டில் நேற்று மக்களிடையே, பிரசாரம் செய்து பேசியதாவது: திருவண்ணாமலை மாவட்டத்திலுள்ள அமைச்சர் வேலு சொல்படி, தி.மு.க., வேட்பாளர் மணி, 'நில்' என்றால் நிற்பார், 'உட்கார்' என்றால் உட்காருவார். தி.மு.க., வேட்பாளரின் முதலாளி, திருவண்ணாமலை மாவட்டத்தில் உள்ளார். அ.தி.மு.க., வேட்பாளர் நல்ல டாக்டர். ஆனால், அவரை பக்கத்து தெருவில் இருப்பவருக்கு கூட தெரியாது.
அவருக்கு, முதலாளி முன்னாள் அமைச்சர் அன்பழகன். எம்.ஜி.ஆருக்கு பின் வந்தவர்கள் தேர்தலில் மோசமான வேட்பாளர்களை நிறுத்தினர். தகுதியான வேட்பாளர்களுக்கு ஓட்டு போடுங்கள். சவுமியா தகுதியான வேட்பாளர். அ.தி.மு.க., - தி.மு.க.,விடம் புதிய சிந்தனைகள், திட்டங்கள் இல்லை. அவை காலாவதியான கட்சிகள். நாங்கள் எடுத்த முடிவு, நல்ல முடிவு. வரும் சட்டசபை தேர்தலில், தி.மு.க., - அ.தி.மு.க., இல்லாத கூட்டணி ஆட்சி அமைக்க வேண்டும் என்பது என் ஆசை.
இது காலத்தின் கட்டாயம். அதற்கு இந்த லோக்சபா தேர்தல் அடித்தளம். தர்மபுரி மாவட்டத்தில், 14 நீர்ப்பாசன திட்டங்கள் கொண்டு வரவேண்டும். தர்மபுரி மாவட்டத்தில், காவிரி, தென்பெண்ணையாறு என, 2 ஆறுகள் ஓடியும் பயனில்லை.
அன்பழகன், 5 முறை எம்.எல்.ஏ., 2 முறை அமைச்சராக இருந்து, தர்மபுரி மாவட்டத்திற்கு என்ன செய்தார். என் நிதியில் இருந்து சித்தேரியில், 50 லட்சம் ரூபாய் மதிப்பில், சமுதாயக்கூடம் கட்டப்பட்டது. பா.ம.க.,வில் தலித் எழில்மலை, பொன்னுசாமி ஆகியோருக்கு அமைச்சர் பதவி வழங்கப்பட்டது.
அரசு ஊழியர்களுக்கு, தி.மு.க., அளித்த தேர்தல் வாக்குறுதிகளான, பழைய ஓய்வூதிய திட்டம் செயல்படுத்தப்படும் என்பன உள்ளிட்ட, 5 கோரிக்கைகளும் நிறைவேற்றப்படவில்லை.இவ்வாறு, அவர் பேசினார்.

