/
உள்ளூர் செய்திகள்
/
கிருஷ்ணகிரி
/
மின்னணு ஓட்டுப்பதிவு இயந்திரத்தில் வேட்பாளர் பெயர், சின்னம் பொருத்தும் பணி

ADDED : ஏப் 11, 2024 12:03 PM
கிருஷ்ணகிரி: தமிழகத்தில் வரும், 19-ல், லோக்சபா தேர்தல் நடக்கிறது. கிருஷ்ணகிரி லோக்சபா தொகுதியில் மொத்தம், 27 பேர் போட்டியிடுகிறார்கள். ஓட்டுச்சாவடிகளில் பயன்படுத்தப்பட உள்ள மின்னணு ஓட்டுப்பதிவு இயந்திரங்களில் போட்டியிடும் வேட்பாளர்களின் பெயர் மற்றும் சின்னம் பொருத்தும் பணி நேற்று தொடங்கியது.
பர்கூர் தாலுகா அலுவலகத்தில் நடந்த இப்பணியை மாவட்ட தேர்தல் நடத்தும் அலுவலரும், கலெக்டருமான சரயு ஆய்வு செய்தார். டி.ஆர்.ஓ., சாதனைக்குறள், கலெக்டரின் நேர்முக உதவியாளர் புஷ்பா, தனி டி.ஆர்.ஓ., பவனந்தி, மற்றும் அலுவலர்கள் உடனிருந்தனர்.
* தர்மபுரி லோக்சபா தொகுதியில், 24 வேட்பாளர்கள் போட்டியிடுகின்றனர். தர்மபுரி லோக்சபா தொகுதிக்கு உட்பட்ட, 6 சட்டசபை தொகுதி ஓட்டுச்சாவடி மையங்களில் பயன்படுத்தப்படும் ஓட்டுப்பதிவு இயந்திரங்களில், வேட்பாளர் பெயர், சின்னம் பொருத்தும் பணி நேற்று நடந்தது.
பாலக்கோடு தாசில்தார் அலுவலகத்தில் நடந்த இப்பணியை, மாவட்ட கலெக்டர் சாந்தி ஆய்வு செய்தார். டி.ஆர்.ஓ., பால்பிரின்ஸ்லி ராஜ்குமார், ஆர்.டி.ஓ., காயத்ரி, உதவி தேர்தல் நடத்தும் அலுவலர் தனப்பிரியா, தாசில்தார்கள் ஜெயசெல்வன், ஆறுமுகம் ஆகியோர் உடனிருந்தனர்.