/
உள்ளூர் செய்திகள்
/
கிருஷ்ணகிரி
/
ஆடி காற்றில் வயலில் சாய்ந்த கரும்புகள் அரூர் விவசாயிகள் கவலை
/
ஆடி காற்றில் வயலில் சாய்ந்த கரும்புகள் அரூர் விவசாயிகள் கவலை
ஆடி காற்றில் வயலில் சாய்ந்த கரும்புகள் அரூர் விவசாயிகள் கவலை
ஆடி காற்றில் வயலில் சாய்ந்த கரும்புகள் அரூர் விவசாயிகள் கவலை
ADDED : ஜூலை 29, 2024 02:11 AM
அரூர்: ஆடி காற்று வீசியதில் கரும்புகள் கீழே சாய்ந்ததால், விவசாயிகள் கவலை அடைந்துள்ளனர்.
தர்மபுரி மாவட்டத்தில், அரூர், மொரப்பூர், பாப்பிரெட்டிப்பட்டி உள்ளிட்ட பகுதிகளில், 2,500க்கும் மேற்பட்ட ஏக்கரில், விவசா-யிகள் கரும்பு நடவு செய்துள்ளனர். இப்பகுதியில் நடவு செய்-துள்ள கரும்புகள், சுப்பிரமணிய சிவா கூட்டுறவு சர்க்கரை ஆலை மற்றும் தனியார் வெல்லம் தயாரிக்கும் ஆலைகளுக்கு அனுப்பப்-படுகின்றன. இந்நிலையில், ஆடி காற்றில் கரும்புகள் வயலில் கீழே சாய்ந்ததால், விவசாயிகள் கவலை அடைந்துள்ளனர்.
இது குறித்து, அவர்கள் கூறியதாவது: ஏற்கனவே, கரும்பு பயிரில் மாவுப்பூச்சி தாக்குதல் மற்றும் வறட்சியால் கரும்பு காய்ந்து வருகிறது. இந்நிலையில், கடந்த சில நாட்களாக வீசும் ஆடிக்காற்றின் வேகம் அதிகமாக உள்ளதால், கரும்புகள் வயலில் கீழே சாய்ந்துள்ளன. இதனால், கரும்புக்கு தண்ணீர் பாய்ச்ச முடி-யாத நிலை உள்ளதுடன், எலிகள் அதிகளவில் கரும்பை கடித்து நாசப்படுத்தும். இன்னும், 4 மாதங்கள் கழித்து, அறுவடை செய்தால், கரும்பின் எடை மற்றும் பிழிதிறன் அதிகரிப்பதுடன், நல்ல விலை கிடைக்கும். முன்கூட்டியே அறுவடை செய்தால், கரும்பின் எடை குறைவதுடன், விலையும் குறைவாக கிடைக்கும். இதனால், விவசாயிகளுக்கு பல ஆயிரம் ரூபாய் நஷ்டம் ஏற்படும். இவ்வாறு, அவர்கள் கூறினர்.

