/
உள்ளூர் செய்திகள்
/
கிருஷ்ணகிரி
/
மனைவியை குத்தி கொன்ற கொடூர கணவனுக்கு வலை
/
மனைவியை குத்தி கொன்ற கொடூர கணவனுக்கு வலை
ADDED : ஏப் 23, 2024 09:42 PM
போச்சம்பள்ளி:கருத்து வேறுபாடால், இரு ஆண்டுகளாக பிரிந்திருந்த மனைவியை குடும்பம் நடத்த அழைத்து வந்து, கத்தியால் குத்திக்கொன்ற கணவரை போலீசார் தேடி வருகின்றனர்.
கிருஷ்ணகிரி மாவட்டம், போச்சம்பள்ளி அடுத்த ஆனந்துார், வெள்ளிமலையை சேர்ந்தவர் சீதா, 36. இவரது கணவர் சின்னமுத்து, 37. இவர்களுக்கு ஒரு மகன், மூன்று மகள்கள் உள்ளனர். தம்பதிக்குள் கருத்து வேறுபாடால் கடந்த, இரு ஆண்டுகளுக்கு முன் பிரிந்தனர்.
சீதா, செங்கழனியூரிலுள்ள தன் சித்தப்பா முருகதாஸ் வீட்டில் வசித்து வந்தார். நேற்று முன்தினம் இரவு, சின்னமுத்து செங்கழனியூரிலுள்ள சீதாவை, குடும்பம் நடத்த நேரில் சென்று அழைத்துள்ளார்.
அதை நம்பிய சீதாவும் கணவர் சின்னமுத்துவுடன் கீழ்செங்கம்பட்டி சென்றார். அப்போது அருகிலுள்ள மாந்தோப்பில் இருவரும் பேசிக் கொண்டிருந்தபோது வாக்குவாதம் ஏற்பட்டு முற்றியது.
ஆத்திரமடைந்த சின்னமுத்து, கத்தியால் சீதாவின் வயிற்றில் குத்தியுள்ளார். இதில், குடல் சரிந்த நிலையில் சீதா பலியானார். போச்சம்பள்ளி போலீசார், தலைமறைவான சின்னமுத்துவை தேடி வருகின்றனர்.

