நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
பாப்பிரெட்டிப்பட்டி,:தர்மபுரி மாவட்டம், பாப்பிரெட்டிப்பட்டி அடுத்த பையர்நத்தம் கிராமத்தில் அமைந்துள்ள ஓங்காளியம்மன் கோவில் திருவிழா கடந்த, 5 ல் கொடியேற்றத்துடன் தொடங்கியது. தொடர்ந்து அம்மனுக்கு சிறப்பு பூஜைகள் நடந்தது.
சுவாமி ஊர்வலமும், நேற்று அதிகாலை வாண வேடிக்கையுடன் மாவிளக்கு எடுத்து அம்மன் தேர் ஊர்வலத்துடன் பக்தர்கள் அலகு குத்தி பொங்கல் வைக்க கோவிலுக்கு சென்றனர். விழாவிற்கான ஏற்பாடுகளை ஊர் பொதுமக்கள் செய்திருந்தனர்.

