/
உள்ளூர் செய்திகள்
/
கிருஷ்ணகிரி
/
ராகவேந்திரர் கோவிலில் ஆராதனை மஹோத்ஸவம்
/
ராகவேந்திரர் கோவிலில் ஆராதனை மஹோத்ஸவம்
ADDED : ஆக 23, 2024 01:57 AM
கிருஷ்ணகிரி, ஆக. 23-
கிருஷ்ணகிரி பழையபேட்டையிலுள்ள சீதாராம வீர ஆஞ்சநேய சமேத ராகவேந்திரர் சுவாமிகள் கோவிலில், 353வது ஆராதனை மஹோத்ஸவ விழா கடந்த, 2 நாட்களுக்கு முன்பு துவங்கியது. இதையொட்டி, ஆஞ்சநேயர் மற்றும் ராகவேந்திரர் சுவாமிக்கு பஞ்சாமிர்த அபிஷேகம், ராம நாம ஜெபம், வாசவி கான லஹரி குழுவினரின் பஜன் நிகழ்ச்சி, ஸகஸ்ரநாம அர்ச்சனை ஆகியவை நடந்தது. நேற்று முன்தினம் காலை, பஞ்சாமிர்த அபிஷேகம், ராம நாம ஜெபம், பஜனா மண்டலியினரின் பஜனை, சஹஸ்ர நாம அர்ச்சனை, மாலை, ராகவேந்திரர் ஸ்வாமியின் திருவீதி உலா நடந்தது. நேற்று, பஞ்சாமிர்த அபிஷேகம், ராம நாம ஜெபம் மற்றும் தும்கூர் மருத் ஆச்சாரின் உபந்யாசம் நடந்தது. இதில் திரளான பக்தர்கள் கலந்து கொண்டனர்.
இதேபோல், கிருஷ்ணகிரி செந்தில்நகரிலுள்ள ராகவேந்திரர் கோவிலில், ஆராதனை மஹோத்ஸவ விழாவையொட்டி, சுப்ரபாதம், நிர்மால்ய அபிஷேகம், வேத பாராயணம், பஞ்சாமிர்த அபிஷேகம், மஹா மங்களார்த்தி ஆகியவை நடந்தது.

