/
உள்ளூர் செய்திகள்
/
கிருஷ்ணகிரி
/
வீட்டின் சுவற்றில் மோதிய லாரி உயிர் தப்பிய டிரைவர் குடும்பம்
/
வீட்டின் சுவற்றில் மோதிய லாரி உயிர் தப்பிய டிரைவர் குடும்பம்
வீட்டின் சுவற்றில் மோதிய லாரி உயிர் தப்பிய டிரைவர் குடும்பம்
வீட்டின் சுவற்றில் மோதிய லாரி உயிர் தப்பிய டிரைவர் குடும்பம்
ADDED : செப் 18, 2024 07:35 AM
ஓசூர்: ஓசூர், பெரியார் நகரில் வசிப்பவர் நாராயணன், 52, டிரைவர். இவர் மனைவி வினோதா, 50. இவர்களது மகன் கோபி, 27. நேற்று காலை கோபி வீட்டில் துாங்கி கொண்டிருந்தார். மற்றவர்கள் எழுந்து வேலைகளை செய்து கொண்டிருந்தனர்.
அப்போது பெரியார் நகர் பகுதியிலுள்ள ரிங்ரோட்டில், மஹாராஷ்டிரா மாநில பதிவு எண் கொண்ட ஈச்சர் லாரியை, அதன் டிரைவர் பின்நோக்கி இயக்கி கொண்டிருந்தார். லாரியின் பிரேக் பிடிக்காததால் கட்டுப்பாட்டை இழந்த லாரி, நாராயணன் வீட்டின் சுவற்றின் மீது மோதி நின்றது.
இதில், வீட்டின் ஆஸ்பெட்டாஸ் சீட் கூரை உடைந்து விழுந்ததில், வீட்டிற்குள் துாங்கி கொண்டிருந்த கோபி, லேசான காயமடைந்தார். மற்றவர்கள் காயமின்றி உயிர் தப்பினர். விபத்து ஏற்படுத்திய லாரி டிரைவர் தப்பியோடினார். ஓசூர் டவுன் போலீசார் விசாரிக்கின்றனர்.