/
உள்ளூர் செய்திகள்
/
கிருஷ்ணகிரி
/
கே.ஆர்.பி., அணையில் 3 நாளில் 177 விநாயகர் சிலைகள் கரைப்பு
/
கே.ஆர்.பி., அணையில் 3 நாளில் 177 விநாயகர் சிலைகள் கரைப்பு
கே.ஆர்.பி., அணையில் 3 நாளில் 177 விநாயகர் சிலைகள் கரைப்பு
கே.ஆர்.பி., அணையில் 3 நாளில் 177 விநாயகர் சிலைகள் கரைப்பு
ADDED : செப் 10, 2024 04:59 AM
கிருஷ்ணகிரி: விநாயகர் சதுர்த்தி விழா கடந்த, 7ல் கொண்டாடப்பட்டது. கிருஷ்ணகிரி மாவட்டத்தில், 803 சிலைகளை வைத்து பக்தர்கள் வழிபட்டனர். 3ம் நாளான நேற்று விநாயகர் சிலைக்கு பூஜை செய்து, ஊர்வலமாக கிருஷ்ணகிரி
கே.ஆர்.பி., அணைக்கு கொண்டு சென்றனர். அங்கு, டி.எஸ்.பி., முரளி மற்றும் தாலுகா இன்ஸ்பெக்டர் குலசேகரன் தலைமையில், 30 போலீசார் மற்றும் வருவாய்த்துறையினர், பொதுப்பணித்துறை, மீன்வளத்துறை, ஆம்புலன்ஸ்
நிர்வாகம், தீயணைப்புத்துறை, ஊர்க்காவல் படை-யினர் என மொத்தம், 100க்கும் மேற்பட்டோர் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டிருந்தனர். இவர்கள், விநாயகர் சிலைகளை கொண்டு வருபவர்களை குறிப்பிட்ட துாரத்தில் தடுத்து
நிறுத்தி, சிலைகளை கரைக்க தனியாக நியமிக்கப்பட்ட ஆட்களை கொண்டு, ராட்சத கிரேன் மூலம் சிலைகளை எடுத்து, நீரில் கரைத்தனர்.அணை நீரில் குறிப்பிட்ட துாரத்திற்கு கயிறு கட்டி, தீயணைப்-புத்துறையினர் மற்றும் போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டி-ருந்தனர். நேற்று மாலை, 5:00 மணி வரை கிருஷ்ணகிரி, திருப்-பத்துார் மற்றும் தர்மபுரி
மாவட்டங்களில் இருந்து, 177 சிலைகள் கரைக்கப்பட்டன.* போச்சம்பள்ளி அடுத்த, மஞ்சமேடு தென்பெண்ணை ஆற்றில் நேற்று, விநாயகர் சிலைகளை கரைக்க மக்கள் கொண்டு வந்தனர். சிலைகளை ஆற்றின் ஓரத்தில் வைத்து பூஜை செய்து, ஆற்றில் கரைத்தனர். பாதுகாப்பு பணியில், 50க்கும் மேற்பட்ட போலீசார் மற்றும் போச்சம்பள்ளி தீயணைப்பு துறையினர் ஈடு-பட்டிருந்தனர்.

