/
உள்ளூர் செய்திகள்
/
கிருஷ்ணகிரி
/
மண் எடுப்பதில் இரு தரப்பினர் மோதல்; 11 பேர் மீது வழக்கு
/
மண் எடுப்பதில் இரு தரப்பினர் மோதல்; 11 பேர் மீது வழக்கு
மண் எடுப்பதில் இரு தரப்பினர் மோதல்; 11 பேர் மீது வழக்கு
மண் எடுப்பதில் இரு தரப்பினர் மோதல்; 11 பேர் மீது வழக்கு
ADDED : ஆக 10, 2024 07:15 AM
கிருஷ்ணகிரி:போச்சம்பள்ளி அடுத்த மாவத்தூரை சேர்ந்தவர் சவுந்தரபாண்-டியன், 46. கீழ்செங்கம்பட்டியை சேர்ந்தவர் ரங்கதுரை, 49. பஞ்., துணை தலைவர். இவர்கள் இருவரும் உறவினர்கள். கடந்த, 8ல், ரங்கதுரை தரப்பினர், மாவத்தூர் ஏரியில் இருந்து மண் எடுத்து சென்றனர். அப்போது சவுந்தரபாண்டியன் தரப்பினர் டிராக்டரை நிறுத்தி, அனுமதி ெபற்று ஏரியில் மண் எடுக்கப்படுகிறதா என கேட்டனர். இது தொடர்பாக அவர்கள் இடையே தகராறு ஏற்பட்-டது.
இருதரப்பினரும் ஒருவரை ஒருவர் தாக்கியுள்ளனர். இது குறித்து சவுந்தரபாண்டியன் போச்சம்பள்ளி போலீசில் அளித்த புகார்படி ரங்கதுரை, 49, நவீன், 45, வெள்ளியங்கிரி, 53, நடராஜ், 48, ராம-மூர்த்தி, 46 ஆகிய 5 பேர் மீது வழக்குப்பதிவு செய்தனர்.
அதே போல ரங்கதுரை அளித்த புகார்படி தமிழரசன், 42, சவுந்த-பாண்டியன், 46, குமரவேல், 37, ரூபன்ராஜ், 22, கிஷோர், 19, செந்திலரசு, 48 ஆகிய 6 பேர் மீது வழக்குப்பதிந்து விசாரிக்கின்-றனர்.

