/
உள்ளூர் செய்திகள்
/
கிருஷ்ணகிரி
/
சென்னை - சேலம் சாலையை இணைக்க பறக்கும் பாலம் அமைக்க அதிகாரிகள் ஆய்வு
/
சென்னை - சேலம் சாலையை இணைக்க பறக்கும் பாலம் அமைக்க அதிகாரிகள் ஆய்வு
சென்னை - சேலம் சாலையை இணைக்க பறக்கும் பாலம் அமைக்க அதிகாரிகள் ஆய்வு
சென்னை - சேலம் சாலையை இணைக்க பறக்கும் பாலம் அமைக்க அதிகாரிகள் ஆய்வு
ADDED : ஏப் 08, 2025 01:57 AM
சென்னை - சேலம் சாலையை இணைக்க பறக்கும் பாலம் அமைக்க அதிகாரிகள் ஆய்வு
கிருஷ்ணகிரி:கிருஷ்ணகிரி ஆவின் மேம்பாலம் அருகே சென்னை சேலம் சாலையை இணைக்கும் வகையில் பறக்கும் பாலம் அமைக்க அதிகாரிகள் ஆய்வை துவக்கி உள்ளனர்.
கிருஷ்ணகிரியில், ஆவின் மேம்பாலம் அருகில் பெங்களூரு சென்னை, சேலம் சென்னை, சேலம் பெங்களூரு சாலைகள் சந்திக்கும் இடமாக உள்ளது. சேலம் பெங்களூரு சாலையில் உயர்மட்ட மேம்பாலம் உள்ளது. ஆனால் சேலத்திலிருந்தும், பெங்களூவிலிருந்தும் சென்னைக்கு செல்பவர்களும் இதே சாலையில் ஆவின் மேம்பாலத்திற்கு கீழ் செல்லும் நிலை உள்ளது. இதனால் நான்குபுறத்திலிருந்தும் வரும் வாகனங்களால் நெரிசலுடன் நாள்தோறும்
விபத்துகள் அதிகரித்த வண்ணம் உள்ளன. இதை தவிர்க்க, பெங்களூரு, சேலத்திலிருந்து சென்னைக்கு செல்வதற்கு தனியாக உயர்மட்ட மேம்பாலம் அமைக்க வேண்டும் எனவும், சேலம் பெங்களூரு சாலையில் ஆவின் மேம்பாலத்திற்கு மேல் பறக்கும் மேம்பாலம் அமைக்க வேண்டும் என, பல்வேறு தரப்பினரும் கோரிக்கை வைத்த நிலையில் கடந்த சில நாட்களுக்கு முன், அ.தி.மு.க., ராஜ்யசபா எம்.பி., தம்பிதுரையும் டில்லியில் நெடுஞ்சாலைத்துறை அமைச்சர் நிதின் கட்கரியை சந்தித்து மனு அளித்தார். இந்நிலையில் தேசிய நெடுஞ்சாலைத்துறை அதிகாரிகள், ஆவின் மேம்பாலத்தில் ஆய்வுகளை துவக்கி உள்ளனர்.
தேசிய நெடுஞ்சாலைத்துறை அதிகாரிகள் கூறியதாவத:கிருஷ்ணகிரி ஆவின் மேம்பாலம் அருகில் சேலம் பெங்களூருவிலிருந்து சென்னைக்கு செல்லும் வகையில் உயர்மட்ட மேம்பாலம் அமைக்கும் சாத்திய கூறுகள், இடங்கள் குறித்து ஆய்வு துவக்கி உள்ளோம். கடந்த சில ஆண்டுகளுக்கு முன்னும் இது குறித்து ஆய்வு செய்யப்பட்டு, 1,000 கோடி ரூபாய் மதிப்பில் திட்ட மதிப்பீடு கருத்துரு அனுப்பப்பட்டது. ஆனால், நடைமுறைப்படுத்தவில்லை. தற்போது அதிகாரிகள் குழு ஆய்வு நடத்தியுள்ளதால், விரைவில் அடுத்த கட்ட
நடவடிக்கை எடுக்கப்படும். இவ்வாறு கூறினர்.

