/
உள்ளூர் செய்திகள்
/
கரூர்
/
கன்டெய்னர் லாரி மீது பைக் மோதி வாலிபர் பலி
/
கன்டெய்னர் லாரி மீது பைக் மோதி வாலிபர் பலி
ADDED : செப் 14, 2025 05:00 AM
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
கரூர்: தென்னிலை அருகே, கன்டெய்னர் லாரி மீது பைக் மோதிய விபத்தில், வாலிபர் உயிரிழந்தார்.
கரூர் மாவட்டம், தும்பிவாடி டி.பசுபதிபாளையம் பகுதியை சேர்ந்த மாரிமுத்து என்பவரது மகன் வசந்த், 25; இவர் கடந்த, 11ம் தேதி இரவு கரூர்-கோவை தேசிய நெடுஞ்சாலையில் தென்-னிலை அருகே, யமஹா பைக்கில் சென்று கொண்டிருந்தார். அப்போது, முன்னாள் சென்று கொண்டிருந்த கன்டெய்னர் லாரி மீது, வசந்த் மோதி கீழே விழுந்தார். அதில், தலையில் படுகாயம் அடைந்த வசந்த், கரூர் அரசு மருத்துவக் கல்லுாரியில் சிகிச்-சையின் போது உயிரிழந்தார்.
தென்னிலை போலீசார் விசாரிக்கின்றனர்.