/
உள்ளூர் செய்திகள்
/
கரூர்
/
முக்கணாங்குறிச்சி சாலையில் வேகத்தடை அமைக்கப்படுமா
/
முக்கணாங்குறிச்சி சாலையில் வேகத்தடை அமைக்கப்படுமா
ADDED : மே 23, 2024 06:46 AM
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
கரூர் : கரூர் - திண்டுக்கல் சாலையில், வெள்ளியணை செல்லும் சாலையில், வெங்ககல்பட்டி மேம்பாலம் இறக்கத்தில் இருந்து இடதுபுறம் முக்கணாங்குறிச்சி உள்ளிட்ட பல்வேறு கிராம பகுதிகளுக்கு செல்லும் சாலை உள்ளது.
குறுகிய சாலையில் தினமும் ஆயிரக்கணக்கான வாகனங்கள் சென்று வருகின்றன. சாலையில் அதிக வளைவு பகுதி உள்ள நிலையில், வேகத்தடை அமைக்காத காரணத்தினால் அடிக்கடி விபத்துகள் ஏற்படுகின்றன. சாலையில் வளைவு உள்ள பகுதியை எச்சரிக்கை செய்யும் விதமாக எச்சரிக்கை பலகையும், வேகத்தடையும் அமைக்க வேண்டும் என அப்பகுதியினர் கோரிக்கை விடுத்துள்ளனர்.

