/
உள்ளூர் செய்திகள்
/
கரூர்
/
தமிழகத்துக்கு உரிய தண்ணீரை எப்போது பெறுவது? விவசாய சங்க தலைவர் கேள்வி
/
தமிழகத்துக்கு உரிய தண்ணீரை எப்போது பெறுவது? விவசாய சங்க தலைவர் கேள்வி
தமிழகத்துக்கு உரிய தண்ணீரை எப்போது பெறுவது? விவசாய சங்க தலைவர் கேள்வி
தமிழகத்துக்கு உரிய தண்ணீரை எப்போது பெறுவது? விவசாய சங்க தலைவர் கேள்வி
ADDED : ஏப் 29, 2024 07:16 AM
கரூர் : 'தமிழகத்துக்கு உரிய தண்ணீரை எப்போது பெறுவது' என, காவிரி நீர்ப்பாசன விவசாயிகள் நலச்சங்க தலைவர் மகாதானபுரம் ராஜாராம் கேள்வி எழுப்பியுள்ளார்.
இதுகுறித்து, அவர் வெளியிட்ட அறிக்கை: தமிழகத்துக்கு, கர்நாடகா அரசு ஆண்டுக்கு, 167.16 டி.எம்.சி., தண்ணீர் தர வேண்டும். ஆனால் தந்தது, 76.77 டி.எம்.சி., தான். தமிழகத்தின் கோரிக்கைக்கு, காவிரி ஆணையம் வறட்சி காலத்தில், 90.48 டி.எம்.சி., தண்ணீர் கொடுத்தால் போதும் என, கூறியிருப்பது பேரிடியாக உள்ளது. தமிழகத்தில் மேட்டூர், பவானிசாகர், அமராவதி அணைகளில், 50.85 டி.எம்.சி., தண்ணீர் தான் உள்ளது.
குறுவை, சம்பா சாகுபடி முடிந்து விட்ட நிலையில், நவரை சாகுபடிக்கு, 12 நாட்கள் இருந்தால் போதும். பயிர் இல்லாத காலத்தில், தண்ணீரை சேமிக்க தமிழகம் கேட்கிறது. ஆனால், கர்நாடகாவில் குடிக்க கூட தண்ணீர் இல்லை என, கர்நாடகா வாதம் மேல்நோக்கி உள்ளது. தமிழகத்துக்கு உரிய தண்ணீரை பெறுவோமா, மேகதாது அணை கட்டாமல் தடுப்போமா அல்லது காவிரி - வைகை - குண்டாறு திட்டத்தை செயல்படுத்துவோமா என்ற, மூன்று கேள்விகள் கண் முன் எழுகிறது. இந்நிலையில், தமிழகத்துக்கு உரிய தண்ணீரை எப்போது பெறுவோம் என, தமிழக அரசு உரிய விளக்கம் அளிக்க வேண்டும்.இவ்வாறு அதில் தெரிவித்துள்ளார்.

