ADDED : மே 08, 2025 01:44 AM
கரூர், முன்னுார் அருகே, காந்திநகர் பகுதியில் காவிரி குடிநீர் குழாய் உடைப்பை சீரமைக்க வேண்டுமென, பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.
க.பரமத்தி, அரவக்குறிச்சி, பள்ளப்பட்டி ஆகிய பகுதிகளுக்கு கடந்த, 2003ம் ஆண்டு முதல் காவிரி கூட்டு குடிநீர் திட்டம் செயல்படுத்தப்படுகிறது.
இந்த திட்டத்தில், நொய்யல் அருகில் மறவாப்பாளையம் காவிரி ஆற்றில் ஆழ்குழாய் கிணறு அமைக்கப்பட்டு, அதிலிருந்து குழாய்கள் மூலம் க.பரமத்தி, அரவக்குறிச்சி, பள்ளப்பட்டி உள்ளிட்ட, 564 கிராமங்களுக்கு காவிரி கூட்டு குடிநீர் வினியோகம் செய்யப்படுகிறது.
இந்நிலையில் நொய்யலில் இருந்து, க.பரமத்தி செல்லும் வழியில் முன்னுார் அடுத்த காந்திநகரில் காவிரி குடிநீர் குழாயில் உடைப்பு ஏற்பட்டுள்ளது.ரு மாதமாகியும் உடைப்பை சீரமைக்காததால், தினமும் ஆயிரக்கணக்கான லிட்டர் குடிநீர் வீணாகி சாலையோரம் ஓடுகிறது. க.பரமத்தி ஒன்றிய பகுதிகளில் உள்ள தொட்டிகளுக்கு, முறையான குடிநீர் வினியோகம் செய்ய முடியவில்லை.
சம்பந்தப்பட்ட அதிகாரிகள், உடைந்த குழாயை சீரமைக்க நடவடிக்கை எடுக்க வேண்டும்.

