/
உள்ளூர் செய்திகள்
/
கரூர்
/
ஓட்டுப்பதிவு இயந்திரம் சரிபார்ப்பு பணி ஒரு மாதம் நடைபெறுகிறது: கலெக்டர்
/
ஓட்டுப்பதிவு இயந்திரம் சரிபார்ப்பு பணி ஒரு மாதம் நடைபெறுகிறது: கலெக்டர்
ஓட்டுப்பதிவு இயந்திரம் சரிபார்ப்பு பணி ஒரு மாதம் நடைபெறுகிறது: கலெக்டர்
ஓட்டுப்பதிவு இயந்திரம் சரிபார்ப்பு பணி ஒரு மாதம் நடைபெறுகிறது: கலெக்டர்
ADDED : டிச 14, 2025 08:41 AM
கரூர்: மின்னணு ஓட்டுப்பதிவு இயந்திரம் சரிபார்ப்பு பணிகள், ஒரு மாதம் வரை நடக்கும் என, கலெக்டர் தங்கவேல் தெரிவித்தார்.
கரூர் கலெக்டர் அலுவலக வளாகத்தில் உள்ள, மின்னணு ஓட்டுப்பதிவு இயந்திரங்கள் பாதுகாப்பு கிடங்கில், ஓட்டுப்பதிவு இயந்திரம் முதல்நிலை சரிபார்ப்பு பணிகள் நடக்கிறது. இதனை, கலெக்டர் தங்கவேல் ஆய்வு செய்தார்.
அப்போது, அவர் கூறியதாவது:
தமிழகத்தில், 2026 சட்டசபை தேர்தலை முன்-னிட்டு கரூர் மாவட்டத்தில், நான்கு தொகுதிகளில் மின்னணு ஓட்டுப்பதிவு இயந்திரங்கள் முதல்-நிலை சரிபார்ப்பு பணிகள் நடக்கிறது. பெங்க-ளூரை சேர்ந்த பாரத் எலக்ரானிக்ஸ் லிமிடெட் மென் நிறுவன பொறியாளர்கள் மற்றும் மாவட்-டத்தில் உள்ள துறை சார்ந்த அலுவலர்களை கொண்டு சரிபார்ப்பு பணிகள் மேற்கொண்டு வரு-கின்றனர். இங்கு, 4,855 மின்னணு ஓட்டுப்பதிவு இயந்திரம், 1,486 ஓட்டுப்பதிவு கட்டுப்பாட்டு இயந்திரம்,- 1,618வி.வி.பேட் ஆகியவைகளில், சரிபார்ப்பு பணிகள் மேற்கொள்ளப்பட்டு வருகி-றது. இப்பணியானது, ஒரு மாதம் வரை மேற்-கொள்ளப்படவுள்ளது. இந்திய தேர்தல் ஆணை-யத்தின் வழிகாட்டுதல்படி பணிகள் மேற்கொள்-ளப்பட்டு வருகிறது. இப்பணியில் துறை சார்ந்த அலுவலர்கள் மற்றும் அங்கீகரிக்கப்பட்ட தேசிய, மாநில அரசியல் கட்சி பிரதிநிதிகள் உள்ளனர்.இவ்வாறு கூறினார்.

