/
உள்ளூர் செய்திகள்
/
கரூர்
/
சிறுமியருக்கு தொல்லை; வியாபாரி கைது
/
சிறுமியருக்கு தொல்லை; வியாபாரி கைது
ADDED : டிச 15, 2025 02:25 AM
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
கரூர்: சிறுமியரை வீட்டில் அடைத்து தொல்லை கொடுத்த வியாபாரியை, 'போக்சோ'வில் போலீசார் கைது செய்தனர்.
கரூர், தொழிற்பேட்டையை சேர்ந்தவர் பகீர் முகமது, 43; இடியாப்ப வியாபாரி. திருமணம் ஆன இவர், நேற்று முன்தினம் மதியம், அதே பகுதியை சேர்ந்த, 12, 10, 7 வயதுடைய மூன்று சிறுமியரை, ஒரு வீட்டில் அடைத்து வைத்து, பாலியல் தொல்லை கொடுத்துள்ளார்.
இதையறிந்த, 12 வயது சிறுமியின் தந்தை, கரூர் மகளிர் போலீசில் புகாரளித்தார். விசாரித்த இன்ஸ்பெக்டர் சுமதி, போக்சோ சட்டத்தில் பகீர் அகமதுவை கைது செய்தார்.

