/
உள்ளூர் செய்திகள்
/
கரூர்
/
தெற்கு காந்திகிராமத்தில் குண்டும், குழியுமான சாலையால் அவதி
/
தெற்கு காந்திகிராமத்தில் குண்டும், குழியுமான சாலையால் அவதி
தெற்கு காந்திகிராமத்தில் குண்டும், குழியுமான சாலையால் அவதி
தெற்கு காந்திகிராமத்தில் குண்டும், குழியுமான சாலையால் அவதி
ADDED : ஜூலை 23, 2025 01:38 AM
அப்பகுதி யினர் அவதிக்குள்ளாகி வருகின்றனர்.
கரூர் மாநகராட்சி, தெற்கு காந்தி கிராமம் சக்தி நகர், இந்திராநகர், கே.கே. நகர் உள்பட 20க்கும் மேற்பட்ட பகுதிகளில், ஆயிரக்கணக்கான குடியிருப்பு
கள் உள்ளன. இங்கு பெரும்பாலான தெருக்களில், சாலை வசதியில்லாமல் பல ஆண்டுகளாக அப்பகுதியினர் அவதிக்குள்ளாகி வருகின்றனர். இதுகுறித்து, தெற்கு காந்திகிராம மக்கள் கூறியதாவது: இங்குள்ள சாலைகளில் தினமும் ஆயிரத்துக்கும் மேற்பட்ட வாகனங்கள் சென்று வருகின்றன. பிரதான சாலைகளை தவிர மற்ற இடங்களில், இன்னும் தார்ச்சாலை வசதி செய்து தரப்படவில்லை. தற்போது பிரதான சாலையும் குண்டும், குழியுமாக மாறிவிட்டது. மேலும், குறுக்கு தெருக்களில் மண் சாலை தான் உள்ளது. மழைக்காலத்தில், சேறும், சகதியுமாக மாறி விடுவதால், வாகன ஓட்டி
கள் மற்றும் பொதுமக்கள் நடந்துகூட செல்ல முடியாமல் அவதிப்படுகின்றனர்.
காலை, இரு சக்கர வாகனத்தில் செல்பவர்கள் நிலை தடுமாறி விழுந்து அடிக்கடி விபத்தில் சிக்குகின்றனர். நாள் கணக்கில் மழை நீர் தேங்குவதால் நோய் பரவும் நிலை உள்ளது. கடந்த, 15 ஆண்டுகளுக்கும் மேலாக தார்ச்சாலை, கழிவுநீர் வடிகால் வசதியில்லாமல் உள்ளது. இப்பகுதியை மாநகராட்சியுடன் இணைத்து மூன்று ஆண்டுகளை கடந்த நிலையில், வரி உயர்வு மட்டுமே பரிசாக கிடைத்துள்ளது.
எவ்வித அடிப்படை வசதிகளும் செய்யப்படவில்லை. வடிகால் வசதி இல்லாததால், தெருக்களில் கழிவுநீர் ஓடுவதால், காய்ச்சல் அதிகம் பரவும் பகுதியாக உள்ளது.
இவ்வாறு கூறினர்.

