/
உள்ளூர் செய்திகள்
/
கரூர்
/
புகழூர் ஐயப்பன் கோவிலில் சங்காபிஷேக சிறப்பு பூஜை
/
புகழூர் ஐயப்பன் கோவிலில் சங்காபிஷேக சிறப்பு பூஜை
ADDED : டிச 22, 2025 08:53 AM

நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
கரூர்: கரூர் மாவட்டம், புகழூர் ஐயப்பன் கோவிலில் நேற்று காலை, மார்கழி மாதத்தையொட்டி விநா-யகர் பூஜையுடன் சங்காபிஷேக விழா தொடங்கி-யது. பின், கோவில் வளாகத்தில் ஹோம பூஜை நடந்தது.
தொடர்ந்து, 108 சங்குகள் வைக்கப்பட்டு, புனித நீர் ஊற்றப்பட்டு, வேதமந்திரங்களுடன் சங்காபி-ஷேகம் நடந்தது. பின், மூலவர் சிறப்பு அலங்காரத்தில் பக்தர் களுக்கு அருள்பாலித்தார். அதில், ஏராளமான பக்தர்கள் பங்கேற்று சுவாமியை வழிபட்டனர். தொடர்ந்து, பக்தர்களுக்கு அன்னதானம் வழங்கப்-பட்டது.

