/
உள்ளூர் செய்திகள்
/
கரூர்
/
மாநகராட்சி அலுவலகம் எதிரில் ஆக்கிரமிப்பு கடைகள் அகற்றம்
/
மாநகராட்சி அலுவலகம் எதிரில் ஆக்கிரமிப்பு கடைகள் அகற்றம்
மாநகராட்சி அலுவலகம் எதிரில் ஆக்கிரமிப்பு கடைகள் அகற்றம்
மாநகராட்சி அலுவலகம் எதிரில் ஆக்கிரமிப்பு கடைகள் அகற்றம்
ADDED : மே 15, 2024 07:55 AM
கரூர் :கரூர் மாநகராட்சி அலுவலகம் எதிரில் இருந்த ஆக்கிரமிப்பு கடைகள் அகற்றப்பட்டன.
கரூர் மாநகராட்சி அலுவலகம் எதிரில், ஆண்கள் மேல்நிலைப்பள்ளியையொட்டி தள்ளுவண்டிகளில் கடைகள், தரைக்கடைகள் வைத்து ஆக்கிரமிப்பு செய்துள்ளனர். சாலை இருபுறமும் ஓரத்தில் வாகனங்கள் நிறுத்தவும், தள்ளுவண்டி, தரைக்கடைகள் அமைக்க, மாநகராட்சி தடை விதிக்கப்பட்டுள்ளது. ஆனாலும் ஏராளமான கடைகள் ஆக்கிரமிப்பு செய்திருந்தன.
இதையடுத்து நமது நாளிதழில், நேற்று முன்தினம் (13ம் தேதி) இது குறித்து செய்தி வெளியாகி இருந்தது. பின், மாநகராட்சி கமிஷனர் சுதா உத்தரவுப்படி, மாநகராட்சி ஊழியர்கள் ஏராளமானோர் பள்ளி எதிரே அமைக்கப்பட்டிருந்த கடைகளை, அதிரடியாக அகற்றினர். இங்கு, கடைகளை போடக்கூடாது என எச்சரித்து அனுப்பினர். மீண்டும் கடைகள் அமைக்காதவாறு கண்காணிக்கப்படும் என, அதிகாரிகள் தெரிவித்தனர்.