/
உள்ளூர் செய்திகள்
/
கரூர்
/
கிருஷ்ணராயபுரம் பகுதியில் மழை வாழை மரங்கள் சாய்ந்ததால் நாசம்
/
கிருஷ்ணராயபுரம் பகுதியில் மழை வாழை மரங்கள் சாய்ந்ததால் நாசம்
கிருஷ்ணராயபுரம் பகுதியில் மழை வாழை மரங்கள் சாய்ந்ததால் நாசம்
கிருஷ்ணராயபுரம் பகுதியில் மழை வாழை மரங்கள் சாய்ந்ததால் நாசம்
ADDED : மே 08, 2025 01:23 AM
கிருஷ்ணராயபுரம், கிருஷ்ணராயபுரம் பகுதியில் பெய்த மழை காரணமாக, விவசாயிகள் சாகுபடி செய்துள்ள வாழை மரங்கள் சேதமடைந்தன.
கிருஷ்ணராயபுரம் ஒன்றியத்திற்கு உட்பட்ட லாலாப்பேட்டை, சிந்தலவாடி, மகிளிப்பட்டி, மகாதானபுரம், பொய்கைப்புத்துார், பிச்சம்பட்டி, திருக்காம்புலியூர், மணவாசி, மாயனுார் ஆகிய பகுதிகளில் நேற்று முன்தினம் இரவு இடியுடன் கூடிய மழை பெய்தது. மேலும் பலத்த காற்று வீசியது. இதில், மகிளிப்பட்டி அடுத்த உடையந்தோட்டத்தை சேர்ந்த விவசாயி செந்தில் என்பவரின், 2 ஏக்கர் நிலத்தில் சாகுபடி செய்திருந்த வாழை மரங்கள் முறிந்து விழுந்தன.
பொய்கைப்புத்துாரை சேர்ந்த கோபால் என்ற விவசாயிக்குரிய, ஒரு ஏக்கர் பரப்பளவில் சாகுபடி செய்யப்பட்ட, 500 வாழை மரங்கள் காற்றில் அடியோடு சாய்ந்தது. இதில் இரு விவசாயிகளுக்கு, ரூ.1.25 லட்சம் மதிப்பில் சேதம் ஏற்பட்டுள்ளது. மேலும் பாதிப்பு அடைந்த பகுதிகளுக்கு, கிருஷ்ணராயபுரம் தோட்டக்கலைத்துறை நிர்வாகம் நேரில் கள ஆய்வு செய்து, நிவாரணம் வழங்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என, விவசாயிகள் எதிர்பார்க்கின்றனர்.

