/
உள்ளூர் செய்திகள்
/
கரூர்
/
எஸ்.டி.டி.யு., தொழிற்சங்கம் சார்பில் மானியத்துடன் ஆட்டோ வழங்கல்
/
எஸ்.டி.டி.யு., தொழிற்சங்கம் சார்பில் மானியத்துடன் ஆட்டோ வழங்கல்
எஸ்.டி.டி.யு., தொழிற்சங்கம் சார்பில் மானியத்துடன் ஆட்டோ வழங்கல்
எஸ்.டி.டி.யு., தொழிற்சங்கம் சார்பில் மானியத்துடன் ஆட்டோ வழங்கல்
ADDED : ஏப் 26, 2024 04:05 AM
அரவக்குறிச்சி,: பள்ளப்பட்டி எஸ்.டி.பி.ஐ., அலுவலகத்தில் மானியத்துடன் கூடிய ஆட்டோ வழங்கும் நிகழ்ச்சி நடைபெற்றது.
எஸ்.டி.டி.யு., தொழிற்சங்கம் சார்பில் நடந்த நிகழ்வில் பள்ளப்பட்டியை சேர்ந்த மூவருக்கு, 85 ஆயிரம் ரூபாய் மானியத்துடன் மூன்று ஆட்டோக்கள் வழங்கப்பட்டது. கரூர் மாவட்ட ஒருங்கிணைப்பாளர் மன்சூர் அலி வரவேற்றார். தொழிற்சங்க மாநில தலைவர் ஆசாத் சிறப்புரை ஆற்றினார். ஈரோடு மாவட்ட தலைவர் அப்துல் ரஹ்மான், ஈரோடு மாவட்ட செயலாளர் தஸ்தகீர், எஸ்.டி.பி.ஐ., கட்சி மாநில செயற்குழு உறுப்பினர் மார்க் பாதர், கரூர் மாவட்ட தலைவர் முஹம்மது அலி ஜின்னா ஆகியோர் பேசினர்.
மாநில தலைவர் ஆசாத், பயனாளர்களுக்கு மானியத்துடன் கூடிய ஆட்டோவை கொடுத்து வாழ்த்தினர். மாவட்ட செயற்குழு உறுப்பினர் மற்றும் லிங்கம நாயக்கன்பட்டி மூன்றாவது வார்டு கவுன்சிலர் ஷேக் பரீத் ஆட்டோக்களை கொடி அசைத்து துவக்கி வைத்தார்.