/
உள்ளூர் செய்திகள்
/
கரூர்
/
அதிக மதிப்பெண் பெற்ற மாணவியருக்கு பரிசு
/
அதிக மதிப்பெண் பெற்ற மாணவியருக்கு பரிசு
ADDED : மே 09, 2025 02:38 AM
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
கரூர், மே 9
கரூர் எம்.எல்.ஏ., அலுவலகத்தில், பிளஸ் 2 தேர்வில் அதிக மதிப்பெண்கள் பெற்ற மாணவ, மாணவியருக்கு பாராட்டு விழா நடந்தது.
எம்.எல்.ஏ., செந்தில்பாலாஜி தலைமை வகித்தார். அரசு பள்ளிகளை சேர்ந்த மூன்று மாணவியருக்கு தலா, 25 ஆயிரம் ரூபாய், அரசு உதவி பெறும் பள்ளிகளை சேர்ந்த மூன்று மாணவியருக்கு தலா, 20 ஆயிரம் ரூபாய், தனியார் பள்ளிகளை சேர்ந்த நான்கு மாணவியருக்கு தலா, 15 ஆயிரம் ரூபாய் என மொத்தம், 1 லட்சத்து, 95 ஆயிரம் ரூபாய் ஊக்கத்தொகையை செந்தில்பாலாஜி வழங்கினார்.

