/
உள்ளூர் செய்திகள்
/
கரூர்
/
மக்களிடம் நாளை மனுக்களை பெறுகிறார் மின்துறை அமைச்சர்
/
மக்களிடம் நாளை மனுக்களை பெறுகிறார் மின்துறை அமைச்சர்
மக்களிடம் நாளை மனுக்களை பெறுகிறார் மின்துறை அமைச்சர்
மக்களிடம் நாளை மனுக்களை பெறுகிறார் மின்துறை அமைச்சர்
ADDED : டிச 14, 2024 12:59 AM
கரூர், டிச. 14-
கரூர் மாநகராட்சி பகுதிகளில், நாளை (15ல்) மின் துறை அமைச்சர் செந்தில் பாலாஜி, பொதுமக்களிடம் கோரிக்கை மனுக்களை பெற உள்ளார்.
இதுகுறித்து, மின்துறை அமைச்சர் அலுவலகம் வெளியிட்டுள்ள செய்திக் குறிப்பு: கரூர் மாநகராட்சிக்குட்பட்ட, காந்தி கிராமம் அரசு மருத்துவ கல்லுாரி மாரியம்மன் கோவில் பகுதி, ராமானுஜர் திடல், வெற்றி தியேட்டர் அருகில், பசுபதிபாளையம் உதயநிதி திடல், பசுபதிபாளையம் வடக்கு தெரு, பாலம்மாள்புரம், வ.உ.சி., தெரு, வாசவி மஹால், மாரியம்மன் கோவில் அருகில், கீரைக்கார தெரு, மக்கள் பாதை, படிக்கட்டுதுறை, முத்துராஜபுரம் கோவில் அருகில் உள்ளிட்ட, 12 இடங்களில் நாளை காலை, 8:00 மணி முதல் மதியம், 1:00 மணி வரை மின் துறை அமைச்சர் செந்தில் பாலாஜி மனு வாங்குகிறார்.
நிகழ்ச்சியில், மாவட்ட கலெக்டர் தங்கவேல் தலைமையில், அனைத்து அரசு துறை அதிகாரிகளும், உள்ளாட்சி பிரதிநிதிகளும் பங்கேற்கின்றனர். மனுவாங்கும் நிகழ்ச்சியில் பொதுமக்கள், குறைகளை மனுக்களாக கொடுத்து பயன் பெறலாம்.
இவ்வாறு கூறப்பட்டுள்ளது.

