/
உள்ளூர் செய்திகள்
/
கரூர்
/
கரூர் ரயில்வே ஸ்டேஷனில் பயணிகளிடம் போலீசார் சோதனை
/
கரூர் ரயில்வே ஸ்டேஷனில் பயணிகளிடம் போலீசார் சோதனை
ADDED : ஏப் 05, 2024 04:42 AM
கரூர்: கரூர் ரயில்வே ஸ்டேஷனில், வாக்காளர்களுக்கு தர பணம் கொண்டு செல்லப்படுகிறதா என, ரயில்வே போலீசார் சோதனை நடத்தினர்.
தமிழகம் மற்றும் புதுவையில் உள்ள, 40 லோக்சபா தொகுதிகளுக்கு வரும், 19ல் தேர்தல் நடக்கிறது. தமிழகத்தில் தி.மு.க., - அ.தி.மு.க., - பா.ஜ., மற்றும் நா.த.க., என, நான்கு முனை போட்டி நடக்கிறது. லோக்சபா தேர்தலுக்கு, 14 நாட்கள் உள்ள நிலையில், அனைத்து கட்சி தலைவர்களும் தீவிர பிரசாரத்தில் ஈடுபட்டு வருகின்றனர். இந்நிலையில், லோக்சபா தேர்தலில் வாக்காளர்களுக்கு, பணம் சப்ளை செய்யப்படுவதை தடுக்க, இந்திய தேர்தல் ஆணையம் பல்வேறு நடவடிக்கைகளை எடுத்து வருகிறது.
அதையொட்டி, கரூர் ரயில்வே ஸ்டேஷனில் நேற்று காலை, பயணிகள் கொண்டு சென்ற சூட்கேஸ்கள், பைகள், பெட்டிகளில் பணம் ஏதாவது கொண்டு செல்லப்படுகிறதா என, ரயில்வே போலீசார் சோதனை நடத்தினர்.

