/
உள்ளூர் செய்திகள்
/
கரூர்
/
காலி குடங்களுடன் மக்கள் சாலை மறியல் போராட்டம்
/
காலி குடங்களுடன் மக்கள் சாலை மறியல் போராட்டம்
ADDED : ஏப் 19, 2024 06:41 AM
குளித்தலை : குளித்தலை அடுத்த, தொண்டமாங்கினம் பஞ்., கவுண்டம்பட்டி மற்றும் தெற்கு கருங்கல்பட்டி கிராமத்தில், 100 க்கும் மேற்பட்ட குடும்பத்தினர் வசித்து வருகின்றனர். இவர்களுக்கு போர்வெல் மூலம் குடிநீர் வினியோகம் செய்யப்பட்டு வந்தது.
இந்நிலையில் ஒரு மாதத்திற்கு மேலாக நிலத்தடி நீர் மட்டம் குறைந்ததால், போர்வெல் நீர் வற்றியதால் குடிநீர் தட்டுப்பாடு ஏற்பட்டது. இது குறித்து பொது மக்கள் சார்பில், பலமுறை பஞ்., தலைவர் மற்றும் யூனியன் கமிஷனரிடம் புகார் தெரிவித்தனர். ஆனால் நடவடிக்கை எடுக்கவில்லை. பாதிக்கப்பட்ட கிராம மக்கள், வெகு தொலைவில் சென்று குடிநீர் எடுத்து வரும் நிலை ஏற்பட்டுள்ளது.பாதிக்கப்பட்ட கிராம மக்கள் நேற்று காலை, 11:30 மணியளவில் கரூர் நெடுஞ்சாலையில் கொசூர் புறக்காவல் நிலையம் எதிரில், நான்கு வழிச்சாலையில் காலி குடங்களுடன் குடிநீர் தட்டுப்பாட்டை போக்க வலியுறுத்தி சாலை மறியலில் ஈடுபட்டனர். தொண்டமாங்கிணம் பஞ்., தலைவர் மகாமுனி மற்றும் தோகைமலை போலீசார் சம்பவ இடத்திற்கு சென்று, பொதுமக்களிடம் பேச்சுவார்த்தை நடத்தினர்.அப்போது, காவிரி குடிநீர் தட்டுப்பாடு இல்லாமல் வழங்கவேண்டும் என பொது மக்கள் கோரிக்கை விடுத்தனர். குடிநீர் தட்டுப்பாட்டை சரி செய்வதாகவும், பொது மக்கள் கோரிக்கை தேர்தலுக்கு பின் நடவடிக்கை எடுக்கப்படும் என்று உறுதியளித்தனர். இதையடுத்து, போராட்டத்தை கைவிட்டு, மக்கள் கலைந்து சென்றனர்.சாலை மறியல் போராட்டத்தால், 1 மணி நேரம் போக்குவரத்து பாதிப்பு ஏற்பட்டது.

