/
உள்ளூர் செய்திகள்
/
கரூர்
/
ரயில்வே தண்டவாளம் வழியாக செல்லும் பாதையை பயன்படுத்த பேச்சுவார்த்தை
/
ரயில்வே தண்டவாளம் வழியாக செல்லும் பாதையை பயன்படுத்த பேச்சுவார்த்தை
ரயில்வே தண்டவாளம் வழியாக செல்லும் பாதையை பயன்படுத்த பேச்சுவார்த்தை
ரயில்வே தண்டவாளம் வழியாக செல்லும் பாதையை பயன்படுத்த பேச்சுவார்த்தை
ADDED : நவ 13, 2024 03:48 AM
குளித்தலை:குளித்தலை
அடுத்த வாலாந்துார் கிராம மக்கள், ரயில்வே தண்டவாளம் பகுதி வழியாக
கடந்து செல்லும் பாதையை பயன்படுத்தி வந்தனர். இந்த பாதையை
முன்னறிவிப்பு இல்லாமல், ரயில் நிர்வாகம் அடைத்தது. இதனால்
அப்பகுதி மக்கள் மறியலில் ஈடுபட போவதாக அறிவிப்பு செய்தனர்.
இதையடுத்து, தாசில்தார் அலுவலகத்தில் அமைதி பேச்சுவார்த்தை கூட்டம்,
நேற்று காலை, 11:30 மணிக்கு, தாசில்தார் இந்துமதி தலைமையில் நடந்தது.
இதில், எம்.எல்.ஏ., மாணிக்கம், துணை தாசில்தார் ஜெயவேல் காந்தன், ரயில்வே
பொறியாளர்கள் ஜோசப், சுந்தர்தாஸ், சண்முகராம், தி.மு.க., ஒன்றிய
செயலாளர் தியாகராஜன், சி.பி.ஐ., ஒன்றிய செயலாளர் முத்துச்செல்வம்
ஆகியோர் பங்கேற்றனர்.
தொடர்ந்து, ரயில்வே ஸ்டேஷனுக்கு மேற்கு
பகுதியில் பொது மக்கள் நடந்து செல்ல பாதை அமைக்கப்பட்டு, இரண்டு
நாட்களில் பயன்பாட்டுக்கு வழங்கப்படும் என தெரிவித்தனர்.
கூட்டத்தில் கலந்து கொண்டவர்கள் அனைவரும் ஏற்றுக்கொண்டனர்.
சிறிது நேரத்தில், ரயில்வே பொறியாளர்கள் மூவரும், யாரிடமும்
தெரிவிக்காமல் காரில் சென்றனர். இதனால், ஆத்திரமடைந்த மக்கள்,
தாசில்தார் அலுவலக வாசலில் அமர்ந்து போராட்டத்தில் ஈடுபட்டனர்.
அவர்களிடம், எம்.எல்.ஏ., - தாசில்தார், ஒன்றிய செயலாளர் ஆகியோர்,
கலெக்டரிடம் பேசி நல்ல முடிவு எடுக்கப்படும் என, உறுதியளித்ததை
அடுத்து, போராட்டத்தை கைவிட்டனர். இதனால் பரபரப்பு ஏற்பட்டது.

