/
உள்ளூர் செய்திகள்
/
கரூர்
/
சட்டவிரோத வெடி மருந்து நடமாட்டம் சுற்றுச்சூழல் பாதுகாப்பு இயக்கம் மனு
/
சட்டவிரோத வெடி மருந்து நடமாட்டம் சுற்றுச்சூழல் பாதுகாப்பு இயக்கம் மனு
சட்டவிரோத வெடி மருந்து நடமாட்டம் சுற்றுச்சூழல் பாதுகாப்பு இயக்கம் மனு
சட்டவிரோத வெடி மருந்து நடமாட்டம் சுற்றுச்சூழல் பாதுகாப்பு இயக்கம் மனு
ADDED : அக் 10, 2024 03:25 AM
கரூர: தமிழ்நாடு சுற்றுச்சூழல் பாதுகாப்பு இயக்க ஒருங்கிணைப்பாளர் முகிலன், கரூர் கலெக்டர் அலுவலகத்தில் அளித்த மனுவில் கூறி-யிருப்பதாவது:
கரூர் மாவட்டத்தில், சட்டவிரோதமாக வெடி மருந்துகளை கல் குவாரிகளில் பயன்படுத்தி வருகின்றனர். கடந்த, 2022 ஏப்ரலில் க.பரமத்தி அருகில், குப்பத்தில் அனுமதியின்றி சட்டவிரோதமாக வெடி மருந்து பயன்படுத்தியதால், கற்கள் சரிந்து விழுந்து ஒருவர் இறந்தார். அதே ஆண்டில், சட்ட விரோத குவாரிகள் குறித்து புகார் தெரிவித்ததால், விவசாயி ஜெகநாதன் வாகனம் ஏற்றி படு-கொலை செய்யப்பட்டார். 2023 முதல் அஞ்சூரில் உள்ள அனு-மதி முடிந்த குவாரிகள் தொடர்பாக பலமுறை புகார் கொடுத்தும், இதுவரை எந்த நடவடிக்கையும் எடுக்கவில்லை. 2024ல், அரவக்குறிச்சி அருகில், அஞ்ச கவுண்டன்பட்டியில் அனுமதி முடிந்த பல்வேறு குவாரிகளில் டன் கணக்கில் சட்ட-விரோத வெடிமருந்து பயன்படுத்தப்பட்டுள்ளது குறித்து கொடுக்-கப்பட்ட பல புகார் மீது இதுவரை எந்த நடவடிக்கையும் எடுக்க-வில்லை.இது போன்று நுாற்றுக்கணக்கான புகார் மனுக்களை, போலீஸ், வருவாய்துறை அதிகாரிகள் கிடப்பில் போட்டுள்ளனர். இனியாவது மாவட்ட நிர்வாகம் தலையிட்டு, சட்ட விரோதமாக செயல்படும் குவாரிகள் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும்.இவ்-வாறு, அதில், கூறப்பட்டுள்ளது.

