/
உள்ளூர் செய்திகள்
/
கரூர்
/
தாய்கோ வங்கி வாயிலாக குறைந்த வெள்ளியணை அருகே குரங்குகள் அட்டகாசம்
/
தாய்கோ வங்கி வாயிலாக குறைந்த வெள்ளியணை அருகே குரங்குகள் அட்டகாசம்
தாய்கோ வங்கி வாயிலாக குறைந்த வெள்ளியணை அருகே குரங்குகள் அட்டகாசம்
தாய்கோ வங்கி வாயிலாக குறைந்த வெள்ளியணை அருகே குரங்குகள் அட்டகாசம்
ADDED : நவ 05, 2024 01:31 AM
தாய்கோ வங்கி வாயிலாக குறைந்த
வெள்ளியணை அருகே
குரங்குகள் அட்டகாசம்
கரூர், நவ. 5-
வெள்ளியணை அருகே, குரங்குகள் செய்யும், சேட்டைகளால் பொதுமக்கள் பெரும் அச்சத்தில் உள்ளனர்.
கரூர் மாவட்டம், வெள்ளியணை அருகே கே.பி. தாழப்பட்டி கிராமம் உள்ளது. இங்கு, தொடக்கப்பள்ளி மற்றும் 500 க்கும் மேற் பட்ட குடியிருப்புகள் உள்ளன. ஆயிரத்துக்கும் மேற்பட்டோர் வசித்து வருகின்றனர். இந்நிலையில், கடவூர் வனப்பகுதிகளில் இருந்து வந்த, 10 க்கும் மேற்பட்டு குரங்குகள் கே.பி. தாழப்பட்டி பகுதியில், கடந்த சில நாட்களாக முகாமிட்டுள்ளன.
உணவு பொருட்களை, வாங்கி செல்பவர்களிடம் இருந்து பறித்து கொண்டு ஓடுகின்றன. மேலும், ஓட்டல்கள், டீ கடைகளிலும் குரங்குகள் கைவரிசையை காட்டி, உணவு பொருட்களை துாக்கி செல்கின்றன. எனவே, வனத்துறை ஊழியர்கள் குரங்குகளை பிடித்து, மீண்டும் கடவூர் மலைப்பகுதியில் விட நடவடிக்கை எடுக்க வேண்டும் என, அப்பகுதியினர் வேண்டுகோள் விடுத்துள்ளனர்.