/
உள்ளூர் செய்திகள்
/
கரூர்
/
மனநலம் பாதிக்கப்பட்டு சுற்றித்திரிந்தவர் மீட்பு
/
மனநலம் பாதிக்கப்பட்டு சுற்றித்திரிந்தவர் மீட்பு
ADDED : பிப் 04, 2025 06:12 AM
குளித்தலை: குளித்தலை அடுத்த, தோகைமலை கடை வீதியில், 50 வயது மதிக்கதக்க ஆண் ஒருவர், உணவு கிடைக்காமலும், பாதுகாப்பு இல்லாமலும் சுற்றித்திரிந்துள்ளார். கடந்த, 10 நாட்களாக உணவு, தண்ணீர் இல்லாமல் சுற்றித்திரிந்தவரை மீட்டு உணவு, சிகிச்சை மற்றும் பாதுகாப்பு அளிக்க வேண்டும் என, அப்பகு சமூகஆர்-வலர் வேலுசாமி சாந்திவனம் மனநல காப்பகத்திற்கு தகவல் அளித்தார்.
இதையடுத்து, தோகைமலை இன்ஸ்பெக்டர் ஜெயராமன், எஸ்.எஸ்.ஐ., ரஸ்யா மற்றும் சாந்திவனம் மனநல
காப்பக பணி-யாளர்கள் தோகைமலை வந்தனர். பின், சுற்றித்திரிந்த நபரை சாந்திவனம் மனநல காப்பக
இயக்குனர் மற்றும் தமிழ்நாடு மாற்-றுத்திறனாளிகள் நல வாரியத்தின் உறுப்பினர் அரசப்பன் மேற்பார்-வையில்,
ஒருங்கிணைப்பாளர் தீணதயாளன், மனநல சமூக பணி-யாளர்கள் யுவலட்சுமி, செவிலியர் அனிதா,
மேற்பார்வையாளர் வேல்முருகன் ஆகியோர் கொண்ட குழுவினர், அந்த நபரை மீட்டு மனநல காப்பத்தில்
அனுமதித்துள்ளனர்.

