/
உள்ளூர் செய்திகள்
/
கரூர்
/
ம.தி.மு.க., நிர்வாகிகள் ஆலோசனை கூட்டம்
/
ம.தி.மு.க., நிர்வாகிகள் ஆலோசனை கூட்டம்
ADDED : பிப் 26, 2024 07:04 AM
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
கரூர் : கரூர் மாவட்ட ம.தி.மு.க., நிர்வாகிகள் ஆலோசனை கூட்டம், மாவட்ட செயலாளர் சிவா தலைமையில், கரூரில் நடந்தது.
அதில், வரும் எம்.பி., தேர்தலில் பூத் கமிட்டி உறுப்பினர்களின் செயல்பாடுகள், தி.மு.க., மற்றும் கூட்டணி கட்சி நிர்வாகிகளுடன், இணைந்து பணியாற்றுவது குறித்து, மாநில பொருளாளர் செந்தில் அதிபன் விளக்கம் அளித்து பேசினார். பிறகு, எம்.பி., தேர்தலுக்காக நிர்வாகிகள், நிதி அளித்தனர்.
கூட்டத்தில், மாநில துணை பொதுச்செயலாளர் டாக்டர் ரொகையா, மாணவர் அணி செயலாளர் சசிக்குமார், மாவட்ட அவைத் தலைவர் ராமசாமி, அரசியல் ஆய்வு மைய உறுப்பினர் ரங்கசாமி, சட்டத்திருத்த குழு உறுப்பினர் சண்முகம் உள்பட பலர் பங்கேற்றனர்.

