/
உள்ளூர் செய்திகள்
/
கரூர்
/
கரூர்-மதுரை தேசிய நெடுஞ்சாலையில் சிக்னல் விளக்குகள் பழுதால் அபாயம்
/
கரூர்-மதுரை தேசிய நெடுஞ்சாலையில் சிக்னல் விளக்குகள் பழுதால் அபாயம்
கரூர்-மதுரை தேசிய நெடுஞ்சாலையில் சிக்னல் விளக்குகள் பழுதால் அபாயம்
கரூர்-மதுரை தேசிய நெடுஞ்சாலையில் சிக்னல் விளக்குகள் பழுதால் அபாயம்
ADDED : மார் 28, 2024 07:04 AM
கரூர் : கரூர் அருகே, போக்குவரத்து சிக்னல் செயல்படாமல் உள்ளதால், அப்பகுதிகளில் அடிக்கடி விபத்துகள் ஏற்படுகிறது.கரூர்-மதுரை தேசிய நெடுஞ்சாலையில், பல்வேறு இடங்களில் போக்குவரத்தை சீர் செய்யவும், விபத்துகளை தடுக்கவும், சிக்னல் விளக்குகள் அமைக்கப்பட்டுள்ளது.
அதில், பல இடங்களில் சிக்னல் விளக்குகள், சேதம் அடைந்து எரியாத நிலையில் உள்ளது. குறிப்பாக, கரூர்-மதுரை தேசிய நெடுஞ்சாலை அம்பாள் நகர் பிரிவு பகுதியில், பல மாதங்களாக சிக்னல் விளக்குகள் எரியாமல் சேதம் அடைந்துள்ளது. இதனால் கரூர் நகர பகுதிக்கு செல்லும் வாகனங்கள், மதுரை, திண்டுக்கல் மாவட்ட பகுதியில் இருந்து கோவை தேசிய நெடுஞ்சாலைக்கு செல்லும் வாகனங்கள் போக்குவரத்தில் சிக்கி கொள்கிறது.மேலும், கரூர் நகரில் இருந்து அம்பாள் நகர் உள்ளிட்ட, பல பகுதிகளுக்கு செல்லும் வாகனங்களும், விபத்து மற்றும் போக்குவரத்து நெரிசலில் சிக்குவதால், சிறு சிறு விபத்துகள் ஏற்படுகிறது. எனவே, கரூர்-மதுரை தேசிய நெடுஞ்சாலை அம்பாள் நகர் பிரிவில், செயல்படாமல் சேதம் அடைந்துள்ள, சிக்னல் விளக்குகளை தேசிய நெடுஞ்சாலை துறை அதிகாரிகள் சரி செய்ய வேண்டும் என, வாகன ஓட்டிகள் எதிர்பார்க்கின்றனர்.

