/
உள்ளூர் செய்திகள்
/
கரூர்
/
அரசு மருத்துவமனைக்கு அடிப்படை வசதி கோரி மா.கம்யூ., ஆர்ப்பாட்டம்
/
அரசு மருத்துவமனைக்கு அடிப்படை வசதி கோரி மா.கம்யூ., ஆர்ப்பாட்டம்
அரசு மருத்துவமனைக்கு அடிப்படை வசதி கோரி மா.கம்யூ., ஆர்ப்பாட்டம்
அரசு மருத்துவமனைக்கு அடிப்படை வசதி கோரி மா.கம்யூ., ஆர்ப்பாட்டம்
ADDED : டிச 19, 2025 06:02 AM
கரூர்: வேலாயுதம்பாளையம் ரவுண்டானா அருகே, மா.கம்யூ., சார்பில் ஆர்ப்பாட்டம் நடந்தது.
புகழூர் நகராட்சி கவுன்சிலர் இந்துமதி தலைமை வகித்தார். முன்னாள் எம்.எல்.ஏ., பாலபாரதி பேசியதாவது:
வேலாயுதம்பாளையம் அரசு மருத்துவம-னையில், அடிப்படை வசதிகள் குறைவாக உள்-ளது. அங்கு, 2 டாக்டர்கள் மட்டுமே பணிபுரிகின்-றனர். கூடுதல் டாக்டர்களை நியமிக்க வேண்டும். அரசு மருத்துவமனையில் போதிய படுக்கை வச-திகள் இல்லை. மேலும், மகாத்மா காந்தி ஊரக வேலைவாய்ப்பு திட்டத்திற்கு நிதி ஒதுக்கீட்டை-தொகையை, மத்திய அரசு குறைத்து வந்தது. தற்போது திட்டத்தின் பெயரை மாற்றி அமைத்து, மாநில அரசு, 40 சதவீத நிதி பங்களிப்பை ஏற்க வேண்டும் என திருத்தம் செய்துள்ளது. கிராமப்-புற ஏழைகளின் வேலைவாய்ப்பு உரிமை பறிக்கும் வகையில் மத்திய அரசு திருத்தியுள்-ளது. இதற்காக வரும், 23ல் நாடு முழுவதும் இட-துசாரி இயக்கங்கள் மிகப்பெரிய போராட்டத்தை நடத்துகிறோம்.இவ்வாறு, அவர் பேசினார்.