/
உள்ளூர் செய்திகள்
/
கரூர்
/
பல்வேறு போட்டிகளில் குளித்தலை கல்லுாரி மாணவர்கள் சிறப்பிடம்
/
பல்வேறு போட்டிகளில் குளித்தலை கல்லுாரி மாணவர்கள் சிறப்பிடம்
பல்வேறு போட்டிகளில் குளித்தலை கல்லுாரி மாணவர்கள் சிறப்பிடம்
பல்வேறு போட்டிகளில் குளித்தலை கல்லுாரி மாணவர்கள் சிறப்பிடம்
ADDED : டிச 21, 2024 01:06 AM
குளித்தலை, டிச. 21-
குளித்தலை அரசு கலைக் கல்லுாரி மாணவர்கள், திருவள்ளுவர் சிலை வெள்ளி விழா ஆண்டு நுண்கலை போட்டிகளில், கரூர் மாவட்ட அளவில் முதல் இரண்டு இடங்களை பெற்று சாதனை புரிந்துள்ளனர்.
தமிழக அரசு, கன்னியாகுமரியில் திருவள்ளுவர் சிலை நிறுவி, 25ம் ஆண்டு வெள்ளி விழாவை முன்னிட்டு, தமிழ்நாடு அரசு உயர் கல்வித்துறை சார்பில், கரூரில் நுண்கலை போட்டிகள் கல்லுாரி மாணவர்களுக்கு இடையே நடத்தப்பட்டது.
குறும்படம் எடுத்தல், திரைச்சுருளை ரீல்ஸ் எடுத்தல், வண்ண ஓவியப்போட்டி ஆகியவை நடத்தப்பட்டன. இதில், குளித்தலை அரசு கலைக்கல்லுாரி தமிழ் முதலாம் ஆண்டு மாணவர் சேரன், வண்ண ஓவிய போட்டியில் முதல் பரிசு, கணினி பயன்பாட்டியல் துறை மூன்றாம் ஆண்டு மாணவர் மதிபிரசாத் ரீல்ஸ் என்னும் திரைச்சுருளை போட்டியில் இரண்டாவது பரிசும் பெற்று சாதனை படைத்தனர்.
வெற்றி பெற்ற மாணவர்களை, குளித்தலை அரசு கலைக்கல்லுாரி முதல்வர் அன்பரசு (பொறுப்பு) மற்றும் தமிழ்துறைத் தலைவர் ஜெகதீசன், தமிழ்துறை பேராசிரியர் வைரமூர்த்தி, கணினி பயன்பாட்டியல் துறை பேராசிரியர் செல்வகுமார் மற்றும் மாணவ மாணவியர் வாழ்த்தினர்.

