/
உள்ளூர் செய்திகள்
/
கரூர்
/
சாயும் நிலையில் டிரான்ஸ்பார்மர் மாற்ற வேண்டியது அவசியம்
/
சாயும் நிலையில் டிரான்ஸ்பார்மர் மாற்ற வேண்டியது அவசியம்
சாயும் நிலையில் டிரான்ஸ்பார்மர் மாற்ற வேண்டியது அவசியம்
சாயும் நிலையில் டிரான்ஸ்பார்மர் மாற்ற வேண்டியது அவசியம்
ADDED : டிச 11, 2024 01:45 AM
சாயும் நிலையில் டிரான்ஸ்பார்மர்
மாற்ற வேண்டியது அவசியம்
கரூர், டிச. 11-
சாயும் நிலையில் உள்ள டிரான்ஸ்பார்மரை, மாற்ற நடவடிக்கை எடுக்க வேண்டும்.
கரூர், சேலம் தேசிய நெடுஞ்சாலையில் உள்ள புகழூரில் டிரான்ஸ்பார்மர் அமைக்கப்பட்டுள்ளது. அதில் இருந்து அப்பகுதியில் உள்ள வீடுகள், தொழிற்சாலைகளுக்கு மின் வினியோகம் செய்யப்பட்டு வருகிறது. தற்போது, டிராஸ்பார்மரின் மின் கம்பங்கள் வலுவிழந்து காணப்படுகிறது. இதனால், மின்கம்பம் பிடிமானம் இல்லாமல் சாயும் நிலையில் உள்ளது.
பாரம் தாங்காமலோ அல்லது பலத்த காற்று வீசினாலோ மின்சார டிரான்ஸ்பார்மர் கீழே விழ வாய்ப்பு உள்ளது. முக்கிய சாலையாக இருப்பதால், டிராஸ்பார்மர் சாய்ந்தால் விபத்து ஏற்பட வாய்ப்பு அதிகம். உடனடியாக, டிரான்ஸ்பார்மரை சரி செய்ய மின்வாரிய அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும் என, அனைத்து தரப்பு மக்களும் எதிர்பார்க்கின்றனர்.