/
உள்ளூர் செய்திகள்
/
கரூர்
/
பூமி பூஜை போட்டு பல மாதமாகிறது நிழற்கூடம் அமைப்பதில் தாமதம்
/
பூமி பூஜை போட்டு பல மாதமாகிறது நிழற்கூடம் அமைப்பதில் தாமதம்
பூமி பூஜை போட்டு பல மாதமாகிறது நிழற்கூடம் அமைப்பதில் தாமதம்
பூமி பூஜை போட்டு பல மாதமாகிறது நிழற்கூடம் அமைப்பதில் தாமதம்
ADDED : ஏப் 06, 2024 02:13 AM
கரூர்:கரூர்
அரசு மருத்துவ கல்லுாரி மருத்துவமனை முன், நிழற்கூடம் அமைக்க
தி.மு.க., எம்.எல்.ஏ.,வால் பூமி பூஜை போடப்பட்டு, பல மாதங்கள் ஆகிறது.
பணிகள் நிறைவு பெறாததால், மக்கள் அவதிப்படுகின்றனர்.
கரூர் நகரின்
மையப்பகுதியில், அரசு மருத்துவ கல்லுாரி மருத்துவமனை செயல்பட்டு
வந்தது. இந்நிலையில் கொளந்தானுார் காந்தி கிராமத்தில், 300 கோடி
ரூபாய் செலவில், புதிய மருத்துவமனை கட்டடம் கட்டப்பட்டு, 2019ல்,
அப்போதைய முதல்வர் பழனிசாமி திறந்து வைத்தார். இதையடுத்து, பழைய
மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்த தாய்மார்கள், உள் நோயாளிகள்
பிரிவு, புறநோயாளிகள் பிரிவு புதிய மருத்துவமனை கட்டடத்துக்கு
மாற்றப்பட்டனர். சித்த மருத்துவ பிரிவை தவிர, பல்வேறு மருத்துவ
பிரிவுகளும், புதிய கட்டடத்துக்கு மாற்றப்பட்டது.
நாள்தோறும்
வெளிப்புற நோயாளிகள், 500க்கும் மேற்பட்டவர்கள் வரை வருகின்றனர்.
இதனால், சென்னை நகரில் இயக்கப்பட்ட, இரண்டு மினி அரசு பஸ்களை கொண்டு
வந்து, முன்னாள் போக்குவரத்து துறை அமைச்சர் விஜயபாஸ்கர், கரூர் பஸ்
ஸ்டாண்டில் இருந்து, அரசு மருத்துவ கல்லுாரி மருத்துவமனை வரை இயங்க
நடவடிக்கை எடுத்தார். அந்த இரண்டு, அரசு மினி பஸ்களும், கரூர் பஸ்
ஸ்டாண்டில் இருந்து, இரண்டு வழித்தடத்தில், அரசு மருத்துவ கல்லுாரி
மருத்துவ கல்லுாரிக்கு இயக்கப்பட்டு வருகிறது. ஆனால், கரூர் அரசு
மருத்துவ கல்லுாரி மருத்துவமனை பகுதியில், நிழற்கூடம் இல்லாததால்,
அரசு மினி பஸ்கள் சாலையில் நிறுத்தப்படுகிறது. இதனால் பொதுமக்கள்,
நோயாளிகள் அனைவரும், கொளுத்தும் கோடை வெயிலில் அவதிப்படுகின்றனர்.
இந்நிலையில்
சில மாதங்களுக்கு முன், கரூர் அரசு மருத்துவ கல்லுாரி மருத்துவமனை
முன், பயணிகள் நிழற்கூடம் கட்ட கிருஷ்ணராயபுரம் தொகுதி தி.மு.க.,
எம்.எல்.ஏ., சிவகாமசுந்தரி பூமி பூஜை போட்டார். ஆனால், பள்ளம்
தோண்டப்பட்ட நிலையில், நிழற்கூடம் கட்டும் பணிகள் கிடப்பில் உள்ளது.
எனவே, மருத்துவ கல்லுாரி மருத்துவமனை முன், நிழற்கூடம் கட்டும்
பணிகளை விரைவாக முடிக்க நடவடிக்கை எடுக்க வேண்டியது அவசியம்..

