/
உள்ளூர் செய்திகள்
/
கரூர்
/
கிருஷ்ணராயபுரத்தில் எள் சாகுபடி தீவிரம்
/
கிருஷ்ணராயபுரத்தில் எள் சாகுபடி தீவிரம்
ADDED : ஏப் 08, 2024 07:31 AM
கிருஷ்ணராயபுரம்: கிருஷ்ணராயபுரம் அடுத்த திருக்காம்புலியூர் பஞ்.,க்குட்பட்ட மேட்டுத்திருக்காம்புலியூர், எழுதியாம்பட்டி, செக்கணம் ஆகிய கிராமங்களில் விவசாயிகள் விளை நிலங்களில் விவசாயம் செய்து வருகின்றனர்.
இதில், எள் சாகுபடி செய்யப்பட்டுள்ளது. எள் சாகுபடிக்கு தேவையான தண்ணீர் கிணற்று நீர் பாசன முறையில் தண்ணீர் பாய்ச்சப்படுகிறது. விளை நிலங்களில் விதைக்கப்பட்ட எள் முளைத்து செடிகளில் பூக்கள் பூத்து காய்கள் பிடித்துள்ளது. வரும் சில வாரங்களில் காய்கள் முற்றியதும் எள் செடிகள் அறுவடை செய்யப்படும் என, விவசாயிகள் கூறினர். குறைந்த நாட்களில் எள் சாகுபடி மூலம் வருமானம் கிடைப்பதால் விவசாயிகள் இந்த சாகுபடிக்கு முக்கியத்துவம் அளித்து வருகின்றனர்.

