/
உள்ளூர் செய்திகள்
/
கரூர்
/
குவிந்துள்ள குப்பையால் சுகாதார சீர்கேடு
/
குவிந்துள்ள குப்பையால் சுகாதார சீர்கேடு
ADDED : டிச 18, 2025 05:35 AM
அரவக்குறிச்சி: அரவக்குறிச்சி அருகே, பள்ளப்பட்டி நகராட்சியில் செயல்பட்டு வரும் குப்பை கிடங்கில், அதிக பரப்பளவு காலியிடங்கள் இருந்தும், குடியிருப்பு பகுதிகளுக்கு மிக அருகில் மலைபோல் குப்பையை குவித்து வைத்துள்ளனர். இதனால், கடும் துர்நாற்றம் வீசுவதுடன், சுகாதார சீர்கேடு ஏற்பட்டு, நோய் தொற்று ஏற்படும் அபாயம் உள்ளது. குறிப்பாக சுவாச கோளாறு ஏற்படுவதாக, மக்கள் புகார் தெரிவிக்கின்றனர்.
குப்பை கிடங்கின் உள்ளே பல இடங்களில் காலியாக இருக்கும் நிலையிலும், தொடர்ந்து குடியிருப்புக்கு அருகிலேயே குப்பையை கொட்டிவருவதால், அப்பகுதி முழுவதும் மலைபோல் குப்பை குவியல் காட்சியளிக்கிறது. இதுகுறித்து சம்-பந்தப்பட்ட அதிகாரிகளிடம் பலமுறை புகார் தெரிவித்தும் நடவ-டிக்கை எடுக்கவில்லை என, குற்றச்சாட்டு எழுந்துள்ளது.எனவே, குடியிருப்பு பகுதிகளுக்கு அருகே குவித்துள்ள குப்-பையை அகற்ற, விரைந்து நடவடிக்கை எடுக்க வேண்டும் என அப்பகுதி மக்கள் வலியுறுத்தி வருகின்றனர்.

