/
உள்ளூர் செய்திகள்
/
கரூர்
/
சாலையில் குப்பை குவியல் சுகாதார சீர்கேட்டால் அவதி
/
சாலையில் குப்பை குவியல் சுகாதார சீர்கேட்டால் அவதி
ADDED : அக் 18, 2024 03:07 AM
சாலையில் குப்பை குவியல்
சுகாதார சீர்கேட்டால் அவதி
கரூர், அக். 18-
கரூரில், - ஈரோடு சாலையோரம் குப்பை குவிந்து இருப்பதால், கடும் துர்நாற்றம் வீசுகிறது.
கரூர் மாநகராட்சி, சின்ன ஆண்டாங்கோவில் கீழ்பாகம் கிராம பஞ்சாயத்து பகுதியை ஒட்டி, ஈரோடு சாலை உள்ளது. கிராம பஞ்சாயத்தாக இருந்தாலும், கரூர் நகரை ஒட்டியுள்ளதால், சின்ன ஆண்டாங்கோவில் பஞ்சாயத்து, நகரம்போல் காட்சியளிக்கும். ஈரோடு சாலையின், இருபுறமும் கொட்டப்பட்ட குப்பை அள்ளப்படாமல் உள்ளது. காற்று பலமாக வீசும்போது, குப்பை சாலையில் சிதறுகின்றன. வாகன ஓட்டிகள் சிரமப்படுகின்றனர். சுகாதார சீர்கேடும் ஏற்படுகிறது. பல ஆண்டுகளாக சாலையோரம் குப்பை குவியல் குறைந்தபாடில்லை. ஈரோடு சாலையில் குப்பையை அகற்ற, நடவடிக்கை எடுக்க வேண்டும்.

