/
உள்ளூர் செய்திகள்
/
கரூர்
/
ஓட்டுச்சாவடியில் சக்கர நாற்காலி இல்லை கலெக்டரிடம் மாஜி அமைச்சர் புகார்

ADDED : ஏப் 20, 2024 08:10 AM
கரூர்: கரூர் அருகே, ஓட்டுச்சாவடியில் சக்கர நாற்காலி இல்லை என, கலெக்டரிடம் மாஜி அமைச்சர் புகார் அளித்தார்.
கரூர் - கோவை சாலை வடிவேல் நகரில் உள்ள, அரசு உயர்நிலைப் பள்ளியில், நான்கு ஓட்டுச்சாவடிகள் அமைக்கப்பட்டிருந்தது. அதில் நேற்று காலை, 7:00 மணி முதல், பெண்களும், ஆண்களும் ஆர்வத்துடன் ஓட்டு போட வரிசையில் காத்திருந்தனர்.
இந்நிலையில் நேற்று காலை, 9:00 மணிக்கு கரூர் மாவட்ட அ.தி.மு.க., செயலாளரும், முன்னாள் அமைச்சருமான விஜயபாஸ்கர், குடும்பத்துடன் ஓட்டு போட வந்தார். அப்போது, நான்கு ஓட்டுச்சாவடிகள் உள்ள, பள்ளியில் முதியோர்கள், உடல் நிலை பாதிக்கப்பட்டவர்கள் அமர்ந்து செல்ல வசதியாக, சக்கர நாற்காலிகள் இல்லை என, வாக்காளர்கள், மாஜி அமைச்சர் விஜயபாஸ்கரிடம் புகார் தெரிவித்தனர்.
இதையடுத்து, கரூர் கலெக்டரும், தேர்தல் நடத்தும் அலுவலருமான தங்கவேலுவை, மொபைல் போனில் தொடர்பு கொண்ட, மாஜி அமைச்சர் விஜயபாஸ்கர், சக்கர நாற்காலி வசதி செய்து தரும்படி தெரிவித்தார். இதையடுத்து, சிறிது நேரத்தில் சக்கர நாற்காலிகள் ஓட்டுச்சாவடிக்கு அனுப்பி வைக்கப்பட்டது.