/
உள்ளூர் செய்திகள்
/
கரூர்
/
நேர்மையுடன் பணியாற்ற வேண்டும் தேர்தல் பொது பார்வையாளர் அறிவுரை
/
நேர்மையுடன் பணியாற்ற வேண்டும் தேர்தல் பொது பார்வையாளர் அறிவுரை
நேர்மையுடன் பணியாற்ற வேண்டும் தேர்தல் பொது பார்வையாளர் அறிவுரை
நேர்மையுடன் பணியாற்ற வேண்டும் தேர்தல் பொது பார்வையாளர் அறிவுரை
ADDED : ஏப் 08, 2024 07:32 AM
கரூர் : ''தேர்தல் அலுவலர்கள் நேர்மையுடன் பணியாற்ற வேண்டும்,'' என, தேர்தல் பொது பார்வையாளர் ராகுல் அசோக் ரெக்காவார் அறிவுரை கூறினார்.
கரூர், தான்தோன்றிமலை அரசு கலைக்கல்லுாரியில் ஓட்டுச்சாவடி தலைமை அலுவலர்களுக்கான, இரண்டாம் கட்ட பயிற்சி வகுப்பு நடந்தது. தேர்தல் பொது பார்வையாளர் ராகுல் அசோக் ரெக்காவார் பார்வையிட்டார்.
அப்போது, அவர் கூறியதாவது: தேர்தல் பணி ஒதுக்கீடு செய்யப்பட்ட ஓட்டுச்சாவடி அலுவலர்களுக்கு, இரண்டாம் கட்ட பயிற்சி வகுப்பு சம்பந்தப்பட்ட மண்டல அலுவலர்கள் மற்றும் உதவி தேர்தல் நடத்தும் அலுவலர்களால், அந்தந்த சட்டசபை தொகுதிக்குட்பட்ட பகுதிகளில் நடந்தது.
அதில், கரூரில், 1,313 பேர், அரவக்குறிச்சியில், 1,105 பேர், கிருஷ்ணராயபுரத்தில், 1,441 பேருக்கு பயிற்சி அளிக்கப்பட்டது. தேர்தல் பணியில் ஈடுபட்டுள்ள அரசு அலுவலர்கள் அனைவரும் நேர்மையுடன் பணியாற்ற வேண்டும். மாற்றுத்திறனாளிகளுக்கு தேவையான அடிப்படை வசதிகளை ஏற்படுத்தித்தர வேண்டும். இந்த பயிற்சி மையங்களில் அமைக்கப்பட்டுள்ள மாதிரி ஓட்டுச்சாவடி மையத்தை, அனைவரும் பார்த்து உங்களுக்கு ஒதுக்கப்பட்டுள்ள பணி குறித்து அறிந்துகொள்ளலாம். இவ்வாறு அவர் கூறினார்.
மாவட்ட உதவி தேர்தல் அலுவலர் கண்ணன், உதவி தேர்தல் அலுவலர்கள் முகமது பைசல் (கரூர்), மகேந்திரன் (கிருஷ்ணராயபுரம்), சுரேஷ் (குளித்தலை) உள்ளிட்டோர் பங்கேற்றனர்.

