/
உள்ளூர் செய்திகள்
/
கரூர்
/
ஊராட்சி ஒன்றிய பள்ளியில் தேர்தல் விழிப்புணர்வு நிகழ்ச்சி
/
ஊராட்சி ஒன்றிய பள்ளியில் தேர்தல் விழிப்புணர்வு நிகழ்ச்சி
ஊராட்சி ஒன்றிய பள்ளியில் தேர்தல் விழிப்புணர்வு நிகழ்ச்சி
ஊராட்சி ஒன்றிய பள்ளியில் தேர்தல் விழிப்புணர்வு நிகழ்ச்சி
ADDED : ஏப் 03, 2024 01:57 AM
அரவக்குறிச்சி:அரவக்குறிச்சி,
ஊராட்சி ஒன்றிய நடுநிலைப் பள்ளியில் ஜனநாயக திருவிழாவான, ஏப்.,
19ல், பாராளுமன்ற தேர்தலுக்கு அனைவரும் ஓட்டளிக்க வலியுறுத்தி
விழிப்புணர்வு நிகழ்ச்சி நடைபெற்றது. தலைமையாசிரியர் சாகுல் அமீது
தலைமை வகித்து, ஜனநாயக கடமையை அனைவரும் நிறைவேற்ற வேண்டும்.
வாக்களிக்க
வாக்காளர் அட்டை மட்டுமன்றி, மேலும் தேர்தல் ஆணையம் அறிவித்துள்ள பிற
அடையாள அட்டைகளை கொண்டும் வாக்களிக்கலாம். ஒவ்வொரு வாக்காளரும்,
தங்களுடைய பெயர் வாக்காளர் பட்டியலில் உள்ளதா என்பதை அறிதல்
வேண்டும். மேலும் தேர்தல் ஆணையத்தின், 1950 எண் மூலம் விவரங்கள்
அறியலாம் என்பதும், அனைவரும் தவறாமல் வாக்களிப்போம். வாக்களிக்க
எவ்விதமான அன்பளிப்புகளையும் பெற மாட்டோம்.
என் ஓட்டு, என் உரிமை, என் கடமை. 100 சதவீதம் தவறாமல் வாக்களிப்போம் என்ற முழக்கங்களோடு நிகழ்ச்சி நிறைவு பெற்றது.
பெற்றோர்களிடம்
விழிப்புணர்வு ஏற்படுத்துமாறு மாணவர்களுக்கு
அறிவுறுத்தப்பட்டது. பட்டதாரி ஆசிரியர் ஷகிலா பானு நன்றி கூறினார்.
ஆசிரியர்கள் சகாயவில்சன், ரொகையா பீவி, கவிதா, கிருஷ்ணவேணி,
புவனேஸ்வரி, ஜோதிமணி, உஷாராணி, ரூபா, சங்கர், நாகராஜன் மற்றும்
மாணவர்கள் விழிப்புணர்வு நிகழ்ச்சியில் பங்கேற்றனர்.

