/
உள்ளூர் செய்திகள்
/
கரூர்
/
எண்மத் தொழில்நுட்ப பயிர் கணக்கீடு பணி மாவட்ட வேளாண் இணை இயக்குனர் ஆய்வு
/
எண்மத் தொழில்நுட்ப பயிர் கணக்கீடு பணி மாவட்ட வேளாண் இணை இயக்குனர் ஆய்வு
எண்மத் தொழில்நுட்ப பயிர் கணக்கீடு பணி மாவட்ட வேளாண் இணை இயக்குனர் ஆய்வு
எண்மத் தொழில்நுட்ப பயிர் கணக்கீடு பணி மாவட்ட வேளாண் இணை இயக்குனர் ஆய்வு
ADDED : டிச 18, 2025 05:33 AM
குளித்தலை: குளித்தலை வட்டாரத்தில் நடைபெறும், எண்மத் தொழில்நுட்ப பயிர் கணக்கீட்டு பணிகளை மாவட்ட வேளாண்மை இயக்குனர் சிங்காரம் கள ஆய்வு மேற்கொண்டார்.
நாடு முழுவதும், எண்மத் தொழில்நுட்பத்தில் பயிர் கணக்கீடு (டிஜிட்டல் கிராப் சர்வே) செய்யும் பணிகள் நடந்து வருகின்றன. மாநில வாரியாக வேளாண்மை சாகுபடி பரப்புகளை துல்லிய-மாக மதிப்பீடு செய்து, அதனடிப்படையில் மேற்கொள்ள வேண்-டிய கட்டமைப்பு பணிகளுக்காக இந்த எண்மத் தொழில்நுட்ப பயிர் கணக்கீட்டை நடத்த மத்திய அரசு
அறிவுறுத்தியது.
தமிழகத்தில், 2024ல் ரபி பருவம் முதல் இந்த டிஜிட்டல் கிராப் சர்வே தொடங்கப்பட்டது. தமிழகத்தில், 37 மாவட்டங்களில் உள்ள, 17,116 வருவாய் கிராமங்களில், 4,23,00,095 சர்வே சப்டி-விஷன் எண்களிலும்; கரூர் மாவட்டத்தில், 200 வருவாய் கிரா-மங்களில், 7,17,052 சர்வே சப்டிவிஷன் எண்களிலும்; குளித்-தலை வட்டாரத்தில், 22 வருவாய் கிராமங்களில், 52,884 சர்வே சப்டிவிஷன் எண்களிலும் எண்மத் தொழில்நுட்ப பயிர் கணக்-கீட்டு பணிகள் மேற்கொள்ள இலக்கு நிர்ணயிக்கப்பட்டு, பணிகள் நடந்து வருகின்றன.இந்த பயிர் கணக்கீட்டு பணிகளை வேளாண்மைத்துறை, தோட்-டக்கலைத்துறை, வேளாண் வணிகத்துறை அலுவலர்கள் மேற்-கொண்டு வருகின்றனர். எண்மத் தொழில்நுட்ப பயிர் கணக்கீட்டு பணிகளை, கரூர் மாவட்ட வேளாண்மை இணை இயக்குனர் சிங்-காரம் கள ஆய்வு மேற்கொண்டார். ஆய்வின்போது, குளித்தலை வேளாண்மை உதவி இயக்குனர் குமரன், வேளாண்மை அலு-வலர் மகேந்திரன், துணை வேளாண்மை அலுவலர் கணேசன் உடனிருந்தனர். இந்த பயிர் கணக்கீட்டு பணியின், தொழில்நுட்-பத்தை வேளாண் கல்லுாரி மாணவியர் உடனிருந்து
கற்றுக்கொண்டனர்.

