ADDED : டிச 19, 2025 06:00 AM
ப.வேலுார்: ப.வேலுார், தெற்கு நல்லியாம்பாளையம் பகு-தியில் போதை மாத்திரை விற்பனை செய்த, மூன்று பேரை போலீசார் கைது செய்தனர்.
ப.வேலுார், பொத்தனுார் பகுதியில் கல்லுாரி மாணவர்கள் மற்றும் இளைஞர்களை குறி வைத்து போதை மாத்திரை விற்பனை செய்வ-தாக ப.வேலுார் போலீசாருக்கு தகவல் கிடைத்-தது. அதன்படி நேற்று மாலை, எஸ்.ஐ., சாந்த-குமார் தலைமையில் போலீசார் கண்காணிப்பில் ஈடுபட்டனர். அப்போது, ப.வேலுார் தெற்கு நல்லி-யாம்பாளையம் பகுதியில் சந்தேகத்திற்கிடமாக நின்றிருந்த மூவரை பிடித்து விசாரித்தனர்.அவர்களிடம் நடத்திய சோதனையில் போதை மாத்திரை இருப்பது தெரிந்தது. இதையடுத்து ப.வேலுார், தெற்கு நல்லியம்பாளையத்தை சேர்ந்த பசுபதி, 24, பரமத்தி பிரபு, 24, படமுடி
பாளையம் அபிதன் 26, ஆகிய மூவரையும் கைது செய்த ப.வேலுார் போலீசார், அவர்களிடம் இருந்த, 29 போதை மாத்திரைகளை பறிமுதல் செய்து, சேலம் மத்திய சிறையில் அடைத்தனர்.

