/
உள்ளூர் செய்திகள்
/
கரூர்
/
மத்திப்பட்டியில் குழாய் விரிசலால் வீணாகும் குடிநீர்
/
மத்திப்பட்டியில் குழாய் விரிசலால் வீணாகும் குடிநீர்
மத்திப்பட்டியில் குழாய் விரிசலால் வீணாகும் குடிநீர்
மத்திப்பட்டியில் குழாய் விரிசலால் வீணாகும் குடிநீர்
ADDED : மார் 17, 2024 02:42 PM
கிருஷ்ணராயபுரம்: மத்திப்பட்டியில், குடிநீர் குழாய் உடைப்பு ஏற்பட்டு தண்ணீர் சாலையோரமாக வீணாகி சென்றது.
கிருஷ்ணராயபுரம் அடுத்த, சிந்தலவாடி காவிரி ஆற்றில் இருந்து, குடிநீர் குழாய்கள் வழியாக கிராம பஞ்சாயத்துகளுக்கு கொண்டு செல்லப்பட்டு வினியோகம் நடக்கிறது. புனவாசிப்பட்டி பிரிவு சாலை வழியாக, மத்திப்பட்டி பிரிவு சாலை அருகில் உள்ள, காவிரி குடிநீர் குழாயில் விரிசல் ஏற்பட்டு தண்ணீர் வீணாகி வருகிறது.
இதனால் கிராம பகுதிகளுக்கு, காவிரி நீர் செல்வதில் பாதிப்பு ஏற்பட்டுள்ளது. மேலும் குழாய் விரிசல் காரணமாக, சாலையோர பள்ளத்தில் அதிகமாக தண்ணீர் சென்று தேங்கி வருகிறது. ஆகையால், காவிரி நீர் வீணாகாமல் தடுக்கும் வகையில் விரிசல் அடைந்த குழாய்களை சரி செய்ய, குடிநீர் வடிகால் வாரிய அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும்.