/
உள்ளூர் செய்திகள்
/
கரூர்
/
தேவி கருமாரியம்மன் கோவில் சித்திரை மாத விழா துவக்கம்
/
தேவி கருமாரியம்மன் கோவில் சித்திரை மாத விழா துவக்கம்
தேவி கருமாரியம்மன் கோவில் சித்திரை மாத விழா துவக்கம்
தேவி கருமாரியம்மன் கோவில் சித்திரை மாத விழா துவக்கம்
ADDED : ஏப் 19, 2024 06:41 AM
சேந்தமங்கலம் : சேந்தமங்கலம், காந்திபுரத்தில் பிரசித்தி பெற்ற தேவி கருமாரியம்மன் கோவில் உள்ளது.
இங்கு சித்திரை மாத திருவிழா காப்புக்கட்டு நிகழ்ச்சியுடன் துவங்கியது. தொடர்ந்து, தேவி கருமாரியம்மன் முக்கிய வீதிகளின் வழியாக ஊர்வலமாக எடுத்து வரப்பட்டார். அப்போது, கருமாரியம்மன் தேரில் பக்தர்கள் வண்ண மலர்களால் உருவான மாலைகள் அணிவித்தனர். இதை தொடர்ந்து, அந்த மாலைகள் பூ மிதி குண்டம் இறங்கும் இடத்தில் போடப்பட்டு, மாலைகளை பக்தர்கள் வணங்கி சென்றனர். விழாவின் முக்கிய நிகழ்ச்சியாக பூ மிதி விழா வரும், 23ல் நடக்கிறது. இதேபோல், ராமநாதம்புதுார் மாரியம்மன் கோவில் திருவிழா காப்புக்கட்டு நிகழ்ச்சியுடன் துவங்கியது. 22ல் பூமிதி விழா நடக்கிறது.