/
உள்ளூர் செய்திகள்
/
கரூர்
/
குடிநீர் குழாயை சரி செய்வதில் தாமதம் வாகன ஓட்டிகள் அவதி
/
குடிநீர் குழாயை சரி செய்வதில் தாமதம் வாகன ஓட்டிகள் அவதி
குடிநீர் குழாயை சரி செய்வதில் தாமதம் வாகன ஓட்டிகள் அவதி
குடிநீர் குழாயை சரி செய்வதில் தாமதம் வாகன ஓட்டிகள் அவதி
ADDED : மார் 09, 2024 12:42 AM
கரூர், வேலாயுதம்பாளையம் அருகே, உடைந்த குடிநீர் குழாயை சரி செய்வதில் தாமதம் ஏற்பட்டுள்ளது. இதனால், வாகன ஓட்டிகள் அவதிப்படுகின்றனர்.
கரூர்-சேலம் தேசிய நெடுஞ்சாலை புகழூர் பிரிவில், தமிழ்நாடு குடிநீர் வடிகால் வாரியம் சார்பில், குழாய்கள் மூலம் அந்த பகுதியில் உள்ள வீடுகள், வர்த்தக நிறுவனங்களுக்கு குடிநீர் சப்ளை செய்யப்பட்டுவருகிறது. இந்நிலையில், கடந்த சில மாதங்களுக்கு முன், புகழூர் பிரிவில் குழாய் உடைந்து, குடிநீர் சாலையில் வீணாக ஓடியது.
இதுகுறித்து, அந்த பகுதியை சேர்ந்த பொதுமக்கள் புகார் தெரிவித்த நிலையில், தமிழ்நாடு வடிகால் வாரியம் சார்பில், உடைந்து குழாயை சரி செய்யும் பணிகள் தொடங்கியது. குழாய் உடைந்த இடத்தில், பெரிய அளவில் பள்ளம் தோண்டப்பட்டது. ஆனால், பணிகளை குறிப்பிட்ட காலத்தில் முடிக்காமல், தாமதம் ஆகிறது. இதனால், புகழூர் நகராட்சியை சேர்ந்த பொதுமக்கள் கடும் அதிர்ச்சியில் உள்ளனர்.
மேலும், புகழூர் பிரிவு வழியாக செல்லும் வாகன ஓட்டிகளும் பெரும் அவதிப்படுகின்றனர். எனவே, கரூர்-சேலம் தேசிய நெடுஞ்சாலை புகழூர் பிரிவில், குழாய் பராமரிப்பு பணிகளை, உடனடியாக நிறைவு செய்ய, தமிழ்நாடு குடிநீர் வடிகால் வாரியம் நடவடிக்கை எடுப்பது அவசியம்.

